பிட்லீ

கல்யாணம் முடிஞ்சு ரொம்ப நாளாச்சு!
ஹன்சிகா
ஹன்சிகா

தனது 50-வது படமான ‘மஹா’வில் தனது ஸ்பெஷல் ஃபிராண்டான சிம்பு நடித்திருப்பதில் ஹன்சிகாவுக்கு ஏகக் கொண்டாட்டமாம். இதைத் தவிர, தமிழ், தெலுங்கு என இன்னும் பத்து படங்கள் கைவசம் இருப்பதால் சீக்கிரமே ஹன்சியின் 60-வது படத்தையும் எதிர்பார்க்கலாம். ”அதெல்லாம் சரி, கல்யாணம் எப்போ?” என்று கேட்டால், “அதுதான் முடிஞ்சிருச்சே... நான் சினிமாவைக் காதலிச்சு, கல்யாணம் பண்ணி ரொம்ப நாளாச்சு. இப்போதைக்கு வேறெந்த சிந்தனையும் இல்லை” என்கிறார் ஹன்சி.

பொழைக்கத் தெரிஞ்ச பொண்ணு...

போதைப் பொருள் வழக்கில் கைதாகி சிறைசென்ற நடிகை சஞ்சனா கல்ராணி, பக்ரீத் அன்று பெங்களூருவில் தனது ஏரியாவில் வசிக்கும் ஏழைகளுக்கு போர்வை வழங்கினார். ’’இந்திய பொருளாதாரத்தில் ஒரு பக்கம் சொகுசுக் கார், ஆடம்பர பங்களா என வாழ்வதையும் மறுபக்கம் தங்குவதற்கு இடமில்லாமல் பலர் சாலைகளில் உறங்குவதையும் கண்டு மனம் வேதனையில் தவிக்கிறது. மழையிலும் குளிரிலும் வீடில்லாதவர்கள் படும் துயரத்தை உங்களால் கற்பனை செய்ய முடியுமா? பலர் இந்தக் கசப்பான உண்மையைப் பார்க்காமல் இருக்கவே கார் கண்ணாடிகளை இறக்குவதில்லை. ஆனால், தேவையானவர்களுக்கு கடைசி மூச்சு வரை என்னால் முடிந்த உதவி செய்வேன்’’ என்கிறார் சஞ்சனா.

சிறை தந்த சிறந்த பாடமோ..?

’கேஜிஎஃப் 2’ நாயகி ஸ்ரீநிதி ஷெட்டிக்கு படம் மெகா ஹிட்டானாலும் அதிக வாய்ப்புகள் வரவில்லை. தமிழ், தெலுங்கு, இந்தியில், பிரபல ஹீரோக்களின் படங்களில் சான்ஸ் கேட்டு கதவுகளைத் தட்டுகிறாராம் ஸ்ரீநிதி. ஆனாலும் திறக்கவில்லையாம். ’கேஜிஎஃப் 2’ படத்துக்கு 3 கோடி சம்பளம் வாங்கிய ஷெட்டி, விக்ரமின் ’கோப்ரா’ படத்துக்கு சம்பளத்தை 7 கோடியாக உயர்த்திவிட்டாராம். கதவுகள் திறக்கப்படாமைக்கு இதுவும் காரணம் என்கிறார்கள்.

நிதியில் கெட்டியா இருந்தா எப்படி ஷெட்டி..?

இந்திய அரசியலைப் போலவே இந்திய சினிமாவிலும் வாரிசுகளுக்குப் பஞ்சமில்லை. அனைத்து மொழிகளிலும் வாரிசுகள் வலம்வருகிறார்கள். அதில் ஒருவரான ஸ்ருதிஹாசன், “வாரிசு நடிகர் என்பதால் வாய்ப்பு எளிதாகக் கிடைக்கலாம், ஆனால், தக்கவைக்க திறமை முக்கியம். வாய்ப்புக்காக அப்பா பெயரை ஒரு முறைகூட நான் பயன்படுத்தியதில்லை. எனது திறமையால்தான் வாய்ப்புக் கிடைத்தது’’ என்கிறார்.

சுருதி குறையாத ஸ்ருதி!

தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் அடிக்கடி பகிர்ந்து வரும் காஜல் அகர்வால், மீண்டும் நடிப்புக்கு ரெடியாகிறார். திருமணத்துக்குப் பிறகும் பல நடிகைகள் நடிப்பில் பிசியாகிவிட, அதே பாணியைப் பின்பற்ற முடிவு செய்துள்ள காஜல், அடுத்த ஆண்டு மீண்டும் நடிக்க வருகிறார். நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட கதைகளாகத் தேர்வு செய்து நடிக்க முடிவுசெய்திருக்கிறாராம் காஜல்.

பாத்தும்மா... அம்மா கேரக்டர்ல ஃபிக்ஸ் பண்ணிடப் போறாங்க!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in