தெருநாய்களுக்காக பேசிய மிருதுளா முரளி!

மிருதுளா முரளி
மிருதுளா முரளி

‘கண்களும் கவிபாடுதே’, ‘நாகராஜசோழன் எம்.ஏ., எம்.எல்.ஏ,’ ‘மணியார் குடும்பம்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மலையாள நடிகை மிருதுளா முரளி. தெருநாய்களுக்கு ஆதரவாக மிருதுளா கூறியிருக்கும் கருத்துகள் தான் இப்போது கேரளத்தில் பரபரப்புப் பேச்சு. கேரள அரசு, வெறிபிடித்த தெருநாய்களைக் கொல்வதற்கு அனுமதிகேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பதாக அண்மையில் செய்திகள் வெளியாகின. இதைக் கடுமையாகக் கண்டித்துள்ள மிருதுளா முரளி, ‘‘கொடூரமான குற்றங்களைச் செய்பவர்களும் இங்கே இருக்கிறார்கள். அதற்காக அவர்களை கொன்றுவிடுகிறோமா என்ன? அப்படி இருக்கையில் வாயில்லாப் பிராணிகளை ஏன் கொல்லவேண்டும்? அவற்றைப் பராமரிக்கவும் அவற்றுக்கான தங்குமிடங்களை கட்டவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in