பிட்லீ

அதிதியை அவர் போக்கில் விட்ட ஷங்கர்!
அதிதி
அதிதி

பலருக்கும் நடிப்பு சொல்லிக் கொடுக்கும் இயக்குநர் ஷங்கர் தனது மகள் அதிதியை அவர் போக்கில் இயல்பாக விட்டிருக்கிறார் போலிருக்கிறது. கார்த்தியின் ‘விருமன்’ நாயகியான அதிதி, தனது கன்னிப் பேட்டியில், “எனது கனவை நிறைவேற்றிய அப்பா, அம்மா, தங்கைக்கு நன்றி. இதுவரை நான் வீட்டை விட்டு எங்கும் சென்றதில்லை. படப்பிடிப்பு சமயத்தில் அந்தக் குறை தெரியாமல் பார்த்துக்கொண்ட சூர்யா - ஜோதிகா நிறுவனத்துக்கு நன்றி. விருமன் படத்தில் பாடுவதற்கு வாய்ப்புக் கொடுத்த யுவன் சாருக்கு நன்றி” என்று சற்றே திணறித்தான் போனார்.

புலிக்கு பூனையா பிறக்கும்... வெய்ட் அண்ட் ஸீ!

மிருணாள் தாக்கூர்
மிருணாள் தாக்கூர்

‘சீதா ராமம்’ படத்தின் கதாநாயகி மிருணாள் தாக்கூருக்கு தென்னிந்திய சினிமாவிலும் இப்போது மதிப்பு கூடியிருக்கிறது. தொலைக்காட்சித் தொடர்கள் வழியாக பாலிவுட்டில் அடிவைத்தவர் மிருணாள். அவை தமிழிலும் டப் ஆகி முன்னணி சேனல்களில் ஒளிபரப்பானதில் தமிழ் சீரியல் ரசிகர்கள் மத்தியிலும் இவர் அறிந்த முகமானார். ஒரு கதாநாயகியின் கதாபாத்திரம் சமீபத்திய இந்திய சினிமாவில் இவ்வளவு மரியாதையுடனும் நேர்மையுடனும் சித்தரிக்கப்பட்டதில்லை என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது ‘சீதா ராமம்’ படம். அந்தளவுக்கு இதில் இளவரசி நூர்ஜஹான், சீதா தேவி என இரட்டைப் பரிமாணங்களில் கலக்கியிருக்கிறார் மிருணாள் தாக்கூர்.

மிரட்டல் மிருணாள்...

ஆத்மிகா
ஆத்மிகா

சமீபத்தில் வெளியான ‘காட்டேரி’ படத்தில் ஆத்மிகாவை ‘கவர்ச்சி பொம்மை’ போல் காட்டியிருந்தார்கள். ஆனால், “எனக்கு கவர்ச்சியான வேடங்களில் நடிக்கவோ, கவர்ச்சியான போட்டோ ஷூட்களைச் செய்து பதிவிடவோ விரும்பமில்லை. நான், செக்ஸ் அப்பீ’லுடன் இருப்பதாகக் கூறி என்னை பிரைன் வாஷ் செய்து விடுகிறார்கள். நல்ல கதாபாத்திரங்களைக் கொடுத்து இந்த டைப் காஸ்டிலிருந்து இயக்குநர்கள்தான் என்னைக் காப்பாற்ற வேண்டும்” என்று வேண்டுகோள் வைத்திருக்கிறார்.

அம்மன் கேரக்டர் வந்தாக்க ஓகே பண்ணிடலாமா?

எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக யாஷிகா ஆனந்த் நடித்த ‘கடமையை செய்' அண்மையில் வெளியானது. இதையொட்டி பத்திரிகையாளர்களை சந்தித்த யாஷிகா, “எஸ்.ஜே.சூர்யா சார் பண்பான மனிதர்; திறமையானவர். படப்பிடிப்பில் ஒவ்வொரு நாளும் அவருடன் பணிபுரியும் போது, நிறையச் சொல்லித் தருவார். கிளாமர் ஹீரோயின் என்ற எனது அடையாளம் இந்தப்படம் மூலம் மாறும். நான் நடித்த படம் மீண்டும் திரையரங்கில் வெளியாவதில் செம்ம ஜாலி” என்றார்.

ஜாலி மூடுல காரை எடுத்துட்டுக் கெளம்பீடாதிங்கோ..!

சிம்பு நட்புக்காக நடித்துக்கொடுத்த ‘மஹா’வில் ஹன்சிகா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்தார். அந்தப் படத்தை தியேட்டர் ரசிகர்கள் கைவிட்டதால் ஓடிடியில் ரிலீஸ் செய்தார்கள். அங்கும் பெரிதாகப் போகவில்லையாம். இருந்தாலும் கைவசமுள்ள 9 படங்கள் தன்னைக் காப்பாற்றும் என பெரிதும் நம்புகிறாராம். இதற்கிடையில், பிரபல அரசியல்வாதியின் மகனை ஹன்சிகா திருமணம் செய்துகொள்ளப் போவதாக செய்திகள் பரபரக்கின்றன. ஆனால், இதுபற்றிக் கேட்டால், “நோ கமெண்ட்ஸ்” என்கிறார் ஹன்ஸ்.

கத்தரிக்கா முத்தினா ஹன்ஸ் வீட்டுக்கு வந்துதானே ஆகணும்..!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in