பிரம்மாஸ்திராவும் பெர்னாண்டஸ் விமர்சனமும்!

எரிகா பெர்னாண்டஸ்
எரிகா பெர்னாண்டஸ்

தமிழில், ‘ஐந்து ஐந்து ஐந்து’, ‘விரட்டு’, ‘விழித்திரு’ படங்களில் நடித்திருப்பவர், எரிகா பெர்னாண்டஸ். இப்போது இந்தி சீரியல்களில் நடித்து வருகிறார்.ரன்பீர் கபூர், ஆலியா பட் நடித்து அண்மையில் வெளியான ’பிரம்மாஸ்திரா’ படம் தொடர்ந்து வசூலில் சாதித்து வருவதாக செய்திகள் பரவிய நிலையில் இந்தப் படம் பற்றிய தனது எதிர்மறையான விமர்சனத்தை வைத்து சூட்டைக் கிளப்பி இருக்கிறார் எரிகா. தனது சமூக வலைதளப் பக்கத்தில் கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்கேற்ற எரிகாவிடம் ‘பிரம்மாஸ்திரா’ பற்றியும் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘‘இந்தப் படத்தில் கிராஃபிக்ஸ் சிறப்பாக இருக்கிறது. அழகாக எடுக்கப்பட்டிருக்கிறது. இதை சிறந்த முயற்சி என்றுதான் சொல்வேன். ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு படம் வெற்றிபெறவில்லை’’ என்று கூறியிருக்கிறார். எரிகாவின் இந்தக் கருத்து பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in