இப்பெல்லாம் மாத்திட்டேன்!

அபர்ணா பாலமுரளி
அபர்ணா பாலமுரளி

‘சூரரைப் போற்று’ படத்துக்குத் தேசிய விருது வாங்கிய பிறகு, அபர்ணா பாலமுரளிக்கு நடிப்புக்கு வாய்ப்புள்ள கேரக்டர்கள் தொடர்ச்சியாக வருகிறதாம். தற்போது மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்துவரும் அபர்ணா, படங்களுக்கு கதை கேட்ட அனுபவத்தையே பெருங்கதையாகச் சொல்கிறார். ‘‘சூரரைப் போற்று படத்துக்கு முன்பு, கதை கேட்கும்போது, மோசமான அனுபவங்களைச் சந்திச்சேன். கதை சொல்பவர்கள் கதையைச் சொல்லும்போது, எனது கேரக்டருக்கு அத்தனை முக்கியத்துவம் இருப்பது போலும், படம் முழுமைக்கும் வருவது போலவும் சொல்வார்கள். ஆனால், படமாகப் பார்த்த பிறகுதான் எனது கேரக்டர் கொஞ்சமே இடம் இருப்பது தெரியவரும். அதனால் இப்பெல்லாம், ஸ்கிரிப்டா கொடுத்துடுங்கன்னு சொல்லிடறேன். அதை படிச்ச பிறகுதான் ஓகே சொல்றேன்’’ என்கிறார் அபர்ணா.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in