சமந்தாவுக்கு என்னதான் ஆச்சு?

சமந்தா
சமந்தா

சோஷியல் மீடியாவில் ரொம்பவே ஆக்டிவாக இருந்த சமந்தாவை, சமீபகாலமாக அந்தப்பக்கம் பார்க்கமுடியவில்லை. ‘அவருக்கு உடல்நிலை சரியில்லை, ஸ்கின் பிரச்சினை... அதனால்தான் சோஷியல் மீடியாவில் அவர் இல்லை’ என்று ஒரு பேச்சு இண்டஸ்ட்ரியில் உலவுகிறது. ‘வீடு மாற்றுகிறார் அதனால் அந்த வேலைகளில் பிஸியாக இருக்கிறார்’ என்றொரு செய்தியும் முன்பு சுற்றியது. தற்போது இந்தியில் வருண் தவானுடன் வெப் தொடரிலும் விஜய் தேவரகொண்டாவுடன் ‘குஷி’ படத்திலும் நடித்துவரும் சமந்தா, ‘யசோதா’ படத்தை ஏற்கெனவே முடித்து விட்டார். ‘குஷி’ டீம் அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக அவர் வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறதாம். அதேபோல் ‘யசோதா’ புரமோஷனுக்காகவும் சமந்தாவின் தேதியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறதாம் படக்குழு. எனினும் அவர் பக்கம் இருந்து எந்தத் தகவலும் இல்லாததால், ‘யசோதா’ டீம் அப்செட் என்கிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in