அதிகம் சம்பளம் வாங்கும் எண்ணம் இல்லை!

பிரியங்கா அருள்மோகன்
பிரியங்கா அருள்மோகன்

‘டாக்டர்’, ‘எதற்கும் துணிந்தவன்’, ‘டான்’ படங்களுக்குப் பிறகு ராஜேஷ்.எம் இயக்கும் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடித்து வருகிறார் பிரியங்கா அருள்மோகன். சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் ’ஜெயிலர்’ படத்தில் தான் நடிக்கவில்லை என்பதைத் தெரிவித்திருக்கிறார்.

“இப்போது நான் நடித்துவரும் படத்தில் என்ன கேரக்டர் என்பதை இப்போதே சொல்ல இயலாது. ஆனால், இதுவரை நடித்ததை விட சிறப்பான கேரக்டர். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்கவே விரும்புகிறேன். ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தில் நான் நடிப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், நான் அதில் நடிக்கவில்லை. அதிக சம்பளம் வாங்கவேண்டும், நம்பர் ஒன் இடத்தில் இருக்கவேண்டும் என்ற எண்ணம் ஏதும் எனக்கு இல்லை. நல்ல கதைகளில் நடிக்க வேண்டும் என நினைக்கிறேன். நம்பர் கேமிலும் எனக்கு அவ்வளவாய் நம்பிக்கையில்லை’’ என்கிறார் பிரியங்கா அருள்மோகன்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in