இவரால தான் படம் ஹிட் ஆனது மாதிரி..!

அனுபமா பரமேஸ்வரன்
அனுபமா பரமேஸ்வரன்

ஒரு படம் ஹிட்டானாலே சம்பளத்தை உயர்த்துவதை இத்தனை நாளும் ஹீரோக்கள் தான் வழக்கமாக வைத்திந்தார்கள் இப்போது நாயகிகளும் அதைப் பின்பற்றத் தொடங்கி இருக்கிறார்கள். சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான தெலுங்கு படம், ‘கார்த்திகேயா 2’. இந்தப் படம் இந்தியிலும் வசூல் அள்ளியதால் படக்குழு செம ஹேப்பி. இதன் ஷூட்டிங்கின் போது இயக்குநருக்கும் படத்தில் நாயகியாக நடித்திருக்கும் அனுபமா பரமேஸ்வரனுக்கும் இடையில் பிரச்சினை வெடித்தது. இப்போது படம் ஹிட்டானதால் இயக்குநரைப் புகழ்ந்து வருகிறார் அனுபமா. அதோடு தனது சம்பளத்தையும் உயர்த்திவிட்டாராம். ‘’இந்தப் படம் ஹிட்டாக கதையில் தொடங்கி பல விஷயங்கள் காரணம். அப்படியிருக்க, தன்னால்தான் ஹிட்டானது போல அனுபமா ஏன் சம்பளத்தை உயர்த்த வேண்டும்?’’ என்று கேட்கிறார்கள் டோலிவுட் சினிமாவில்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in