மூன்று குழந்தைகளுக்கு அம்மாவாக ஹூமா!

ஹூமா குரேஷி
ஹூமா குரேஷி

‘காலா ‘வலிமை’ படங்களில் வலம்வந்த ஹூமா குரேஸி, ‘மகாராணி’ என்ற வெப் தொடரில் நடித்திருந்தார். இதன் இரண்டாம் சீசன் இப்போது உருவாகி இருக்கிறது. இதில் ராணியாக நடித்திருக்கிறார் அவர். ‘‘கரோனா காலகட்டத்தில் நான் கேட்ட முதல் ஸ்கிரிப்ட் இதுதான். ஜூம் மீட்டிங்கில் கேட்டேன். சோனி லைவ் டீமும் இருந்தது. முதல் முறை கதையை சொன்னபோதே பிடித்துவிட்டது. சம்மதித்துவிட்டேன். மூன்று குழந்தைகளுக்கு அம்மாவாக ஏன் நடிக்க வேண்டும் என்று சிலர் கேட்டார்கள். ஏன் நடிக்கக்கூடாது என்றேன். இந்தக் கதையை அழகாக உருவாக்கி இருந்ததால், நான் என் கருத்து எதையும் கூறவில்லை. நல்ல கதையை என் விருப்பத்துக்காக கெடுக்க விரும்பவில்லை. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பு மாதிரி இதற்கும் கிடைக்கும்’’ என்கிறார் ஹூமா.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in