பிட்லீ

பிட்லீ

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக தமிழுக்கு அறிமுகமானவர் ஸ்ரீ திவ்யா. ஓவியாவுக்கு முன்னதாகவே இவருக்குத்தான் ஆர்மி தொடங்கி ஆர்ப்பாட்டம் செய்தார்கள் ரசிகர்கள். ஆனால் யார் கண்பட்டதோ, சில படங்களுடன் ஸ்ரீதிவ்யா காணாமல்போனார். தற்போது, அவரை மீண்டும் அழைத்து வந்திருக்கிறார் நடிகர் திலகத்தின் பேரன். ‘வெள்ளக்கார துரை’ படத்தைத் தொடர்ந்து ‘டைகர்’ எனும் படத்திலும் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யாவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

ஊதா கலரு ரிப்பனுக்கு பெரிய இடத்து சிபாரிசு!

‘பேச்சிலர்’ படத்தில், ‘லிவிங் டுகெதர்’ கேரக்டரை துணிச்சலாக நடித்துக்காட்டி அசத்தினார் திவ்யா பாரதி. ‘இவரெல்லாம் ஒரு ஹீரோயினா’ என்று கிண்டலடித்த நெட்டிசன்கள், அவருடைய அதிரடி ஆடைக் குறைப்பு புகைப்படங்களுக்கு ‘லைக்’குகளைக் கொட்டினார்கள். ஆனாலும் அடுத்தடுத்த வாய்ப்புகள் இல்லாமல் அல்லாடிக் கொண்டிருந்தவருக்கு, இப்போது ஒரு படம் கிடைத்துவிட்டது. 2019-ல், மலையாளத்தில் வெளியான ‘இஸ்க்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் கதிருக்கு ஜோடியாக நடிக்கிறார் திவ்யா பாரதி.

இனி எல்லோருக்கும் ’இஸ்க் இஸ்க்’ என்றே கேட்கட்டும்!

‘எனிமி’ படத்தில் தான் நடித்த காட்சிகளை 10 நிமிடங்களாக வெட்டிவிட்டதாக, மிருணாளினி ரவி பேட்டி ஒன்றில் புலம்பித் தள்ளினார். அதற்கு, “விஷாலின் புதிய படம் ரிலீஸ் ஆகும் நிலையில் முந்தைய படத்தைப் பற்றிய உண்மையை உடைத்தால் யார் கண்டுகொள்ளப்போகிறார்கள் என்கிற ஐடியாவா?” என்று பேட்டியெடுத்தவர் கேட்க, “எனிமி பற்றி நீங்கள் கேட்டதால்தான் சொன்னேன்” என்று பூசிமெழுகி விட்டார் பொண்ணு.

சாது மிரண்டால் காடு கொள்ளாது!

மலையாளத்தில் ஹிட்டடித்த ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’ படம், கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில் தமிழில் ‘கூகுள் குட்டப்பா’வாக உருவாகியிருக்கிறது. இதில், பிக் பாஸ் முகேன், லாஸ்லியா இருவரும் ஜோடியாக நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்துக்காக நாஞ்சில் நாட்டுப் பேச்சு வழக்கைக் கற்றுக்கொண்டு சொந்தமாக டப்பிங் பேசியிருக்கிறாராம் லாஸ்லியா. படத்தில் முகேனுக்கும் தனக்குமான இன்டிமேட் காட்சிகளில் வரும் செல்லச் சிணுங்கலை டப் பண்ண முடியாமல் மிகவும் சிரமப்பட்டதாக வெட்கப்பட்டிருக்கிறார் லாஸ்லியா.

ரிலீஸ் தேதிக்காக லாஸ்லியா ஆர்மி வெயிட்டிங்!

‘சார்பட்டா பரம்பரை’யில் ஆர்யாவுடன் அசத்திய துஷாரா, அடுத்ததாக ‘அநீதி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ‘சார்பட்டா பரம்பரை’க்கு முன்பே துஷாரா நடித்த ‘அன்புள்ள கில்லி’ படம், கலர்ஸ் தமிழில் நேரடியாக அண்மையில் ஒளிபரப்பானது. இதற்காக பிரஸ் மீட் நடத்திய படக்குழுவினர், படத்தில் நடித்திருந்த நாயையும் உடன் அழைத்து வந்திருந்தனர். துஷாராவை மறக்காத அந்த நாய், அவரிடமே வாலைக் குழைந்துகொண்டு வட்டமிட்டதை பிரஸ் மீட் ஹால் மொத்தமும் வேடிக்கை பார்த்தது!

நன்றியுள்ள பிராணியாச்சே?!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in