வெப்சீரிஸ் பக்கம் ஒதுங்கும் இலியானா!

இலியானா
இலியானா

வாய்ப்பில்லாத பல நடிகர், நடிகைகளுக்கு வெப்சீரிஸ்தான் இப்போது கைகொடுத்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மொழியில் இருந்தும் நடிகர்கள் தேவை என்பதால், பலர் பல்வேறு மொழிகளில் தயாராகும் வெப் தொடர்களில் பிசியாகிவிட்டனர். அந்த லிஸ்ட்டில் இப்போது புதிதாகச் சேர்ந்திருக்கிறார் இலியானா. தமிழ், தெலுங்கு, இந்தி சினிமாவில் ரவுண்ட் கட்டிய இலியானாவுக்கு இப்போது அதிக வாய்ப்பில்லை. அவர் நடித்த இரண்டு இந்தி படங்கள் எப்போதோ ஷூட் முடிந்து ரிலீஸுக்கு காத்திருக்கின்றன. இதற்கிடையில் தான் அவர் வெப் தொடரில் அறிமுகமாகிறார். இது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட தொடராம். அது பற்றிய விவரங்கள் விரைவில் வரும் என்கிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in