பிட்லீ

ஆக்‌ஷனில் இறங்கும் பூஜா!
பூஜா ஹெக்டே
பூஜா ஹெக்டே

தமிழில் ’பீஸ்ட்’ படத்துக்குப் பிறகு இந்தியில் சல்மான் கானின் ’கபி ஈத் கபி தீவாளி’ படத்தில் நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே. அடுத்து விஜய் தேவரகொண்டாவுடன் ‘ஜனகணமன’ படத்தில் நடிக்க இருக்கிறார். புரி ஜெகநாத் இயக்கும் இந்தப் படம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் மொழிகளில் உருவாகிறது. தேசப்பற்றை வலியுறுத்தும் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டேவுக்கும் ஆக்‌ஷன் காட்சிகள் இருக்கிறதாம். அவர் உயரத்துக்கு ஆக்‌ஷன் அம்சமா பொருந்தும் என்கிறார்கள்.

ஆந்திரா பக்கம் ஏரோபிளேனையே எகிறி அடிப்பாய்ங்களே!

ஹோம்லியான கேரக்டர்களில் நடித்துவரும் பிரியா பவானி சங்கருக்கு அடுத்தடுத்து ஏழு படங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கின்றன. அத்தனையும் டாப் ஹீரோக்களின் படங்கள். ‘‘யானை படத்தில் நடிக்கையில் இயக்குநர் ஹரியிடம் “வழக்கமா உங்க படத்துல செட் பாடல் இருக்கும். அதுல ஹீரோயின் கிளாமரா நடிப்பாங்க, இதுல எப்படி?” எனக் கேட்டாராம் பிரியா. அதற்கு ஹரி, ”நான் இப்ப மாறிட்டேன், இந்தப் படத்துல அப்படியான பாடல் இல்லை” என்று சொன்னாராம். “அதனால ‘யானை’ படத்துல நான் கிளாமரா நடிக்கல” என்கிறார் பிரியா பவானி.

வாய்ப்பு அமையலையேன்னு வருத்தப்படுறீங்களா பவானி?

நடிகை பூர்ணாவை, திருமணம் செய்வதாக ஏமாற்றி பணம் பறிக்க முயன்ற சம்பவம் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பரபரப்பானது. அந்த வழக்கின் விசாரணை இன்னும் முடிவுக்கு வராத நிலையில், துபாய் தொழிலதிபர் ஷனித் என்பவருடன் பூர்ணாவுக்கு திருமணம் பேசப்பட்டிருக்கிறது. ஜூலை 23-ல் நிச்சயதார்த்தம்; அக்டோபரில் திருமணம். வாழ்த்துகளால் பூரித்திருக்கிறார் பூர்ணா.

தொட்டுத் தொடரும் தொழிலதிபர் பந்தம்!

தமிழில் ‘கொடி’, ‘தள்ளிப்போகாதே’ படங்களில் நடித்துள்ள அனுபமா பரமேஸ்வரன் இப்போது தெலுங்கில் பிஸி. முன்பு, கிரிக்கெட் வீரர் பும்ராவை இவர் காதலிப்பதாக வதந்திகள் பரவியது. அப்போது அதை மறுத்தவர் இப்போது, “நானும் காதலில் விழுந்தேன்” என்கிறார். “உங்கள் காதலர் சினிமா துறையைச் சேர்ந்தவரா?” என்று கேட்டால், “மூச்” என்று வாயடைக்கும் அனுபமா, “இது ஒரு தலை காதலாகவும் இருக்கலாம்” என்று புதிர் போடுகிறார்.

எல்லாத்துக்கும் சேப்டியா இருக்காங்களாமா!

பிரியங்கா அருள் மோகன் பக்கம் அடிக்கிறது அதிர்ஷ்டக் காற்று. சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’, ‘டான்’, சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படங்கள் மூலம் கவனிக்கப்பட்ட பிரியங்கா, அடுத்து அருண் மாதேஷ்வரன் இயக்கும் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். இன்னும் சில டாப் ஹீரோக்களின் படங்களில் நடிக்கவும் பிரியங்காவுடன் பேச்சுவார்த்தை நடக்கிறதாம்.

ஆக, பிரியங்கா இப்போதைக்கு ஃப்ரீயா இல்லப்பா!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in