அப்புறம் தான் காதலித்தாராம் கேத்ரீனா!

கேத்ரீனா கைஃப்
கேத்ரீனா கைஃப்

நடிகை கேத்ரீனா கைஃப், தனது காதலர் விக்கி கவுசலை காதலித்து அண்மையில் திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில், இருவரும் காதலில் விழுந்தது எப்படி என்பதை இப்போது தெரிவித்திருக்கிறார் கேத்ரீனா. ‘‘நாங்கள் காதலிப்பதாகச் செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தபோது, நாங்கள் காதலிக்கவில்லை. விக்கி கவுசல் பற்றி அப்போது நான் கேள்விபட்டிருக்கிறேன்; அதிகம் தெரியாது. பழகியதும் இல்லை. ஒரு விருது விழாவில்தான் முதன் முதலில் அவரைச் சந்தித்தேன். அப்போதே என் மனதில் அவர் இடம் பிடித்துவிட்டார். அவரைக் காதலிப்பதும் திருமணம் செய்வதும் எனக்கு விதிக்கப்பட்டது என்று நினைக்கிறேன்’’ என்கிறார் கேத்ரீனா.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in