பிட்லீ

நடிக்காட்டியும் முழுச் சம்பளம்!
காஜல் அகர்வால்
காஜல் அகர்வால்

சிரஞ்சீவியின் ‘ஆச்சார்யா’ படத்தில் முதலில் நடிக்க இருந்த த்ரிஷா, சிறு கேரக்டர் என்பதால், விலகிவிட்டார். அதனால் அந்த இடத்தில் காஜல் அகர்வால் ஃபிக்ஸ் ஆனார். ஆனால், முதல் ஷெட்யூல் முடிந்ததுமே அவரையும் நீக்கிவிட்டார்கள். சின்ன கேரக்டர் என்பதாலும் படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடி வேண்டாம் என்பதாலும் நீக்கியதாகச் சொன்னார் இயக்குநர். இருந்தாலும் ஒரு பாடலில் வருகிறார் அவர். ஆனாலும் இந்தப் படத்துக்காக பேசிய மொத்த சம்பளம் 1.5 கோடியையும் காஜலுக்கு கரெக்ட்டாகக் கொடுத்துவிட்டார்களாம்

‘96’ நடிகைக்கு ஒன்றரைக் கோடி போச்சேப்பா..!

‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் திருடியாக வந்து மனங்களைத் திருடியவர் ரிது வர்மா. தெலுங்கு நடிகையான இவர், அதற்கு முன் ’வேலையில்லா பட்டதாரி’ படத்தில் சின்ன ரோலில் நடித்திருந்தார். தமிழ், தெலுங்கில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள ’கணம்’ விரைவில் வெளிவர இருக்கிறது. அடுத்ததாக, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் மார்க் ஆண்டனி படத்தில் ரிது தான் ஹீரோயினாம்.

விட்டா... சூப்பர் ஸ்டார் படத்துக்கும் வருவாங்க போலயே!

போதைப் பொருள் வழக்கில், சஞ்சனா கல்ராணியுடன் கைது செய்யப்பட்ட ராகினி திவேதி நான்கரை மாத சிறைவாசத்துக்குப் பின்பு ஜாமீனில் வந்திருக்கிறார். இந்த வழக்கு ஒருபுறம் நடந்தாலும் இப்போது நடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கி இருக்கிறார் ராகினி. சுந்தர்.சி நடிக்கும் த்ரில்லர் படத்தில் நாயகியாக நடிக்கும் இவர், சந்தானம் நடிப்பில் தமிழ், கன்னடத்தில் உருவாகும் படத்தில், க்ளாமர் ரோலில் நடிக்க இருக்கிறார். இன்னும் சில கன்னட படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறதாம்.

வில்லங்கத்தில் சிக்கினால் தான் விமோசனம் பிறக்குமோ?

’புஷ்பா’ வெளியாகி ஐந்து மாதங்களுக்கு மேல் ஆன போதும் ’ஒரே ஒரு குத்துப்பாட்டு, ஓஹோன்னு வாழ்க்கை’ என்று சமந்தாவை இன்னமும் புகழ்கிறார்கள். குத்துப் பாடலால் அவருக்கு சில இந்தி வாய்ப்புகள் கிடைத்திருப்பதால் இந்த பேச்சு. இதைச் சொல்லிச் சொல்லியே, குத்துப் பாடலுக்கு ஆட முன்னணி நடிகைகளின் கால்ஷீட்டை கேட்கிறார்களாம். அப்படி தெலுங்கில் வருண் தேஜின் ’கானி’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார் தமன்னா. எந்த பலனும் இல்லை. அடுத்து பூஜா ஹெக்டே உட்பட சில டாப் ஹீரோயின்கள் தெலுங்கில் ஒரு பாடலுக்கு ஆட இருக்கிறார்கள். என்ன ஆகப் போகிறதோ?

எல்லாரும் இப்புடிக் கெளம்பிட்டா... மெயின் பாட்டுக்கு யாருய்யா ஆடுறது?

கன்னடம் தாய்மொழி என்றாலும் தமிழில்தான் நடிகையாக அறிமுகமானார், மும்பையில் பிறந்து வளர்ந்த வேதிகா. இவர், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்திருந்தாலும் கன்னடத்தில் அதிகம் நடித்ததில்லை. இவர் நடித்து சமீபத்தில் வெளியான கன்னடப் படம், ’ஹோம் மினிஸ்டர்’. “சினிமாவுக்கு மொழி ஒரு பிரச்சினை இல்லை என்றாலும் தாய் மொழியில் நடிப்பது வேறொரு உணர்வைத் தருகிறது” என்று சொல்லும் வேதிகா, தமிழில் பிரபு தேவாவுடன் ‘வினோதன்’ படத்திலும் தமிழ், தெலுங்கில் உருவாகும் ஜங்கிள் படத்திலும் நடித்து வருகிறார்.

தாய்மொழி பற்றி சிலாகிக்கிறாரே... அம்மிணிக்கு மார்க்கெட் டல்லடிக்குதோ?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in