பான் இந்தியா படத்தில் நந்திதா!

நந்திதா ஸ்வேதா
நந்திதா ஸ்வேதா

நடிகை நந்திதா ஸ்வேதா, இப்போது பான் இந்தியா படம் ஒன்றில் கமிட்டாகி இருக்கிறார். ’ஓடிபி’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படம், சைபர் க்ரைம் த்ரில்லர் கதையை மையமாகக் கொண்டதாம். தெலுங்கு இயக்குநர் கல்யாண் குமார் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படம், ஆச்சரியத்தையும் நூறு சதவிகித த்ரில்லையும் கொடுக்கும் என்கிறார் நந்திதா ஸ்வேதா. ‘‘கல்யாண் குமாரின் கதை உண்மையிலேயே வித்தியாசமாகவும் தனித்துவமாகவும் இருந்தது. உடனடியாக ஓகே சொல்லிவிட்டேன். இந்தக் கதையின் மீது எனக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது’’ என்கிறார் நந்திதா.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in