பிட்லீ

இவங்க மறைச்சாலும் அவங்க கண்டுபிடிச்சுட்டாங்க!
கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ்

தமிழில், உதயநிதியுடன் ‘மாமன்னன்’, தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ‘போலா சங்கர்’, நானியுடன் ’தசரா’ உட்பட சில படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டதாக கடந்த சில நாட்களாக பரபரப்பு பேச்சு. முந்தைய படங்களை விட சமீபத்தில் மகேஷ்பாபுவுடன் அவர் நடித்து வெளியான ’சர்காரு வாரி பாட்டா’ படத்தில் கீர்த்தியின் உதடுகள் சற்று வித்தியாசமாக இருப்பதை ’ஆய்வு’ செய்த ரசிகர்கள், பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளதாகத் தெரித்துள்ளனர். உண்மையா என்று விசாரித்தால், வழக்கம் போல மௌனம் காக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

மௌனம் சம்மதத்தின் அடையாளமா கீர்த்தி?

சர்ச்சை நாயகி கங்கனா நடிப்பில் வெளியான 'தாக்கத்’ இந்திப் படம். மோசமான தோல்வியைத் தழுவி இருக்கிறது. சினிமாவில் வெற்றி தோல்வி சகஜம் என்றாலும் இதுதான் நேரம் என்று கங்கனாவை விளாசித் தள்ளுகிறார்கள் நெட்டிசன்ஸ். இதற்கு முன், நடிகைகள் டாப்ஸி, தீபிகா படுகோன் மற்றும் வாரிசு நடிகைகள் மீது இஷ்டத்துக்கு விமர்சனங்களை வைத்த கங்கனாவை நோக்கித் திரும்பி இருக்கிறது கணை. கங்கனாவுக்கு ஆதரவாக யாருமே வராத நிலையில், நடிகை ரிச்சா சதா மட்டும், கங்கனாவின் தோல்வியைக் கொண்டாடுவது சரியான நடைமுறை இல்லை என்று குரல் கொடுத்திருக்கிறார்.

வாழ்க்கையே ஒரு வட்டம் என்பதைப் புரிந்தால் சரி!

மாலத்தீவுக்கு படையெடுக்கும் நடிகைகள் அங்குள்ள கடற்கரை ரிசார்ட்டில் நடந்தபடி, சைக்கிள் ஓட்டியபடி, முட்டியளவு தண்ணீரில் நின்றபடி எடுத்துக் குவிக்கும் புகைப்படங்களால் தங்கள் இன்ஸ்டா பக்கத்தை நிரப்பி வருகிறார்கள். ஆனால், தமன்னா சற்றே வித்தியாசம் காட்டியிருக்கிறார். கேன்ஸ் சர்வதேசத் திரைப்பட விழாவில் முதன்முறையாக கலந்துகொண்ட தமன்னாவுக்கு எக்கச்சக்க மகிழ்ச்சி. “இந்தியாவின் சார்பில் இந்த விழாவில் கலந்துகொண்டது பெருமை” என்று அங்கு பேட்டி கொடுத்துவிட்டு, பாதியிலேயே தாய்லாந்துக்குத் திரும்பிவிட்டார், ஓய்வெடுக்க. அங்குள்ள மெது அலை கடற்கரையில் ஜாலியாக நடந்து, ஊஞ்சலாடி அவர் எடுத்துள்ள புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலானது.

வெயில் நேரத்துல சும்மா வெறுப்பேத்தாதீங்க கண்ணுகளா..!

’ஜென்டில்மேன் 2’ படத்தில் அறிமுகமாக இருக்கிறார் நயன்தாரா சக்கரவர்த்தி. இவரும் மலையாள வரவுதான். பல மலையாளப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள இந்த நயன், தமிழில் ‘குசேலன்’ படத்தில் குழந்தையாக வந்துபோனார். கொஞ்சம் பூசினாற்போல் இருக்கும் நயன், லேடி சூப்பர் ஸ்டார் மாதிரி ஒல்லி பெல்லியாக வேண்டும் என்று ஜிம்மே கதியென்று இருக்கிறார். அவர் வொர்க் அவுட் செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மலையாள மீடியாவில் கன்னாபின்னாவென்று பரவி வருகிறது.

சீக்கிரமே இவங்களும் சூப்பர் ஸ்டாரோட ஹீரோயின் ஆகிருவாங்க...

பிருத்விராஜ் நடித்துள்ள ’ஆடுஜீவிதம்’ என்ற மலையாளப் படத்தில் நடித்திருக்கிறார் அமலா பால். இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. இதையடுத்து அமலா பால் நடிப்பில் உருவாவதாக இருந்த சில படங்கள், அறிவிப்புகளோடு நின்று போயின. தெலுங்கிலும் அவருக்கு வாய்ப்புகள் இல்லை. இந்நிலையில் ஹலீதா ஷமீம் இயக்கும் ’மின் மினி’ என்ற படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் அமலா பால். விஷ்ணு விஷாலும் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். ’ராட்சசன்’ படத்தில் இணைந்த இந்த ஜோடி, ’மின்மினி’யில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறது.

ஆமா பின்ன... வாய்ப்பு அமையலைங்கிறதுக்காக வாசலையே பார்த்துட்டு உட்கார்ந்திருக்க முடியுமா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in