விக்கிபீடியாவை யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்கிறார்களா என்ன? - கேட்கிறார் மல்லிகா ஷெராவத்

மல்லிகா ஷெராவத்
மல்லிகா ஷெராவத்

மல்லிகா ஷெராவத் என்றதுமே அவருடைய கிளாமர்தான் ரசிகர்களுக்கு சட்டென நினைவுக்கு வரும். விக்கிபீடியாவும் இந்தியாவின் செக்ஸ் சிம்பல் என்றுதான் அவரை வர்ணிக்கிறது. ஒரு நடிகையாக இந்த இமேஜ் எப்படி இருக்கிறது என்று மல்லிகாவிடம் கேட்டால், “என் முதல் படத்தில் கிளாமர் ரோலில் நடித்தேன். தொடர்ச்சியாக அதுபோன்ற வாய்ப்புகள் வந்தது. அதனால் இப்படி பெயர் வைத்துவிட்டார்கள். நான் இதிலெல்லாம் கவனம் செலுத்தவில்லை. இதை யார் எழுதினார்கள் என்றும் தெரியவில்லை. விக்கிபீடியாவை யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்கிறார்களா என்ன? இருந்தாலும் அதைப்பற்றி எல்லாம் நான் கவலைப்படவில்லை. நடிப்பில் மட்டுமே என் கவனம் இருக்கிறது’’ என்கிறார் மல்லிகா.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in