தமிழைத் தொடர்ந்து தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பிந்து!

தமிழைத் தொடர்ந்து தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பிந்து!

நடிகை பிந்து மாதவி, தெலுங்கு பிக்பாஸில் கலந்து கொண்டிருக்கிறார்.

தமிழில் ’வெப்பம்’ படம் மூலம் அறிமுகமானவர் பிந்து மாதவி. தொடர்ந்து கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, பசங்க 2 படங்களில் நடித்தார். தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் நடித்த அவர், தமிழில் கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸில் கலந்து கொண்டு புகழ்பெற்றார்.

இதனை தொடர்ந்து தற்போது தெலுங்கு டிஜிட்டலில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் நான்ஸ்டாப் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக அவர் கலந்து கொண்டிருக்கிறார். இதற்கு பெறும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த நிகழ்ச்சியை நடிகர் நாகர்ஜுனா தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது தமிழில், சசிகுமாருடன் ’பகைவனுக்கு அருள்வாய்’, மாயன் மற்றும் இயக்குநர் ரஞ்சித் ஜெயகொடி இயக்கத்தில் நாயகியை முதன்மை கதாபாத்திரமாக கொண்ட ‘யாருக்கும் அஞ்சேல்’ படங்களில் நடித்துள்ளார் பிந்து மாதவி.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in