பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை பிந்து மாதவி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை பிந்து மாதவி
பிந்து மாதவி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை பிந்து மாதவி பங்கேற்பதாகக் கூறப்படுகிறது.

தமிழில் பொக்கிஷம், வெப்பம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், பசங்க 2, கழுகு, கழுகு 2 உட்பட பல படங்களில் நடித்தவர் பிந்து மாதவி. தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். தமிழில், பிக் பாஸ் முதல் சீசனில் பங்கேற்றிருந்த இவர், இனி பிக் பாஸ் வீட்டுக்குச் செல்லவே மாட்டேன் என்று கூறியிருந்தார்.

பிந்து மாதவி
பிந்து மாதவி

இதற்கிடையே, இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி, பிக் பாஸ் அல்டிமேட் என்ற பெயரில், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். அவர் விலகியதால், இப்போது நடிகர் சிலம்பரசன் தொகுத்து வழங்க இருக்கிறார்.

தமிழைப் போலவே தெலுங்கிலும் இந்த நிகழ்ச்சி, ‘பிக் பாஸ் நான் ஸ்டாப்’ என்ற பெயரில் நாளை முதல் ஒளிபரப்பாக இருக்கிறது. இதில் யார், யார் பங்குபெறப் போகிறார்கள் என்பதில் ஆர்வமாக உள்ளனர். இந்நிலையில் நடிகை பிந்து மாதவியும் பங்கேற்பதாக தெலுங்கு திரையுலகில் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.