புது கதாபாத்திரத்தில் நடிக்கிறார் பிந்துமாதவி

புது கதாபாத்திரத்தில் நடிக்கிறார் பிந்துமாதவி

`நாகா’படத்தில் நடிகை பிந்துமாதவி, நாகம்மன் பக்தையாக நடிக்கிறார்.

'அடிதடி', 'மகா நடிகன்', 'ஜன்னல் ஓரம்', 'பாஸ்கர் தி ராஸ்கல்' போன்ற படங்களை தயாரித்த கே.முருகன், எம்.எஸ்.மூவீஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கும் படம் "நாகா". இவர் ஏற்கெனவே, பிரபுதேவா, மகிமா நம்பியார் நடிக்கும் 'கருட பஞ்சமி' படத்தை தயாரித்து வருகிறார். அடுத்து ’நாகா’ படத்தை தயாரிக்கிறார்.

இதில், நாக அம்மன் பக்தையாக பிந்துமாதவி நடிக்கிறார். ரைசா வில்சன், ஶ்ரீகாந்த், கருணாகரன், விஜய் நெல்லிஸ், ரிகின் சாய்கல் உட்பட பலர் நடிக்கிறார்கள். 'நஞ்சுபுரம்', 'அழகு குட்டி செல்லம்' படங்களை இயக்கிய சார்லஸ் இயக்குகிறார். புராணங்களில் சொல்லப்படுகிற நாகலோகம் இந்த காலத்திலேயும் இருக்கிறது என்பதை சொல்கிறது இந்தப் படம்.

’நாகா’ பட  தொடக்க விழா
’நாகா’ பட தொடக்க விழா

’நாகப்பட்டினம், நாகூர் பகுதிகளை உள்ளடக்கிய கடற்கரையோர பகுதியில் தொன்மையான நாகநாடு இருந்தது. அவற்றுக்கும் நாகராஜா கோயில்களுக்கும் புராணங்களில் குறிப்பிடப்படும் நாகலோகத்துக்குமான தொடர்பை வைத்துப் பின்னப்பட்டிருக்கும் கதை இது. தற்கால சமூகப் பிரச்சினை ஒன்றையும் அழுத்தமாகப் பதிவு செய்கிறது’ என்கிறது படக்குழு.

இதன் தொடக்கவிழா சென்னையில் இன்று நடந்தது. வரும் 27-ம் தேதி முதல் பாண்டிசேரியில் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது. விஷால் சந்திரசேகர் இசை அமைக்கிறார். எஸ்.ஆர்.சதிஷ்குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in