கரோனாவுக்குப் பிறகு ரசிகர்களின் ரசனை மாறிவிட்டது! - ஹன்சிகா

ஹன்சிகா
ஹன்சிகா

குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கிய ஹன்சிகா, இப்போது முன்னணி நடிகையாக இருப்பதற்கு, நடிப்பை அதிகம் நேசிப்பதுதான் காரணம் என்கிறார். கதைகளை எப்படி தேர்வு செய்கிறீர்கள் என்று கேட்டால், “என் திறமையை வெளிப்படுத்த என்ன வாய்ப்பிருக்கிறது என்றுதான் பார்க்கிறேன்” என்கிறார்.

“கரோனாவுக்கு பிறகு ரசிகர்களின் ரசனை மாறிவிட்டது. படைப்பாளிகள், தயாரிப்பாளர்கள், நடிகர்களிடம் புதிதாக ரசிகர்கள் எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். அதனால், ஒரு கதையை கேட்கும்போது அதில் என் கேரக்டர் எப்படி இருக்கிறது, அதற்கு என்ன சவால்கள் இருக்கிறது என்பதைப் பார்க்கிறேன். அதனடிப்படையில்தான் கதைகளைத் தேர்வு செய்கிறேன்’’ என்கிறார் ஹன்சிகா.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in