நடிகர் அஜித்துடன் இமயமலை, லடாக் பகுதிகளில் பிரபல நடிகை பைக் பயணம்: வைரலாகும் புகைப்படங்கள்

நடிகர் அஜித்துடன் இமயமலை, லடாக் பகுதிகளில் பிரபல நடிகை பைக் பயணம்: வைரலாகும் புகைப்படங்கள்

நடிகர் அஜித்துடன் பைக் பயணம் குழுவாக சென்ற அனுபவத்தை நடிகை மஞ்சு வாரியர் பகிர்ந்திருக்கிறார்.

இயக்குநர் ஹெச். வினோத்துடன் தனது 61-வது படத்திற்காக நடிகர் அஜித் மூன்றாவது முறையாக இணைந்திருக்கிறார். இதன் பெரும்பாலான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. படப்பிடிப்பு ஷெட்யூல் முடிந்து அடுத்த ஷெட்யூலுக்கான இடைவேளையில் நடிகர் அஜித் பைக்கில் லடாக், ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

இந்த நிலையில் நடிகர் அஜித் மற்றும் அவரது பைக் குழுவுடன் நடிகை மஞ்சு வாரியரும் சமீபத்தில் இணைந்துள்ளார். மஞ்சு வாரியர் அஜித்தின் 61-வது படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இமயமலை, லடாக் பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மஞ்சு வாரியர் இந்த அனுபவம் குறித்து பகிர்ந்திருப்பதாவது: சூப்பர் ஸ்டார் ரைடர் அஜித்குமாருக்கு என்னுடைய மிக பெரிய நன்றி. பயணத்தில் மிகுந்த ஆர்வம் உடைய நான் பல ஆயிரம் மைல்களை இதுவரை நான்கு சக்கரங்களில் தான் அதிகம் பயணப்பட்டுள்ளேன்.

ஆனால், இரண்டு சக்கரங்களில் பயணப்படுவது இதுவே முதல் முறை. பைக் பயணத்தின் மீது மிகுந்த ஆர்வம் உடைய இந்த ரைடர்ஸ், என்னையும் இந்த குழுவில் இணைத்ததற்கு நன்றி. பல பெருமை மிகு பைக் பயண ஆர்வலர்களையும் அஜித் சார் எனக்கு அறிமுகப்படுத்தினார். உங்களுக்கு அன்பும் நன்றியும் என நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார் மஞ்சு வாரியார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in