கூல் சுரேஷை கொந்தளிக்க வைத்த பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்... பரபரக்கும் புரோமோ!

பிக் பாஸ் வீட்டில் கூல்சுரேஷ்...
பிக் பாஸ் வீட்டில் கூல்சுரேஷ்...

பிக் பாஸ் வீட்டில் இதுவரை ரகளையும் வம்புமாக இருந்த கூல் சுரேஷை சக போட்டியாளர்கள் டென்ஷனாக்கியுள்ள புரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் வீட்டிற்குள் 16 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இந்த நிலையில், மீதமுள்ள போட்டியாளர்களுக்கு விறுவிறுப்பாக டாஸ்க் நடந்து வருகிறது. அந்த வகையில், திடீர் டுவிஸ்ட் ஆக கொடுக்கப்பட்ட டாஸ்கில் கூல் சுரேஷை ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் நேரடியாக நாமினேஷனுக்கு தேர்வு செய்துள்ளனர்.

இன்று சாபக்கல் ஒன்றை ஹவுஸ்மேட்ஸிடம் கொடுத்த பிக் பாஸ், அந்த சாபக்கல்லை யாரேனும் ஒரு போட்டியாளருக்கு கொடுக்க வேண்டும் என கூறுகிறார். அதிகப்படியான நபர்களால் தேர்ந்தெடுக்கப்படும் போட்டியாளர் கையில் அந்த சாபக்கல் கொடுக்கப்படும் என அறிவிக்கிறார் பிக் பாஸ்.

அதில் பெரும்பாலானோர் கூல் சுரேஷை தான் தேர்வு செய்தனர். இந்த சாபக்கல் வாங்கும் போட்டியாளர் உடனடியாக பிக்பாஸ் வீட்டில் இருந்து ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பப்படுவதோடு, அடுத்தவார நாமினேஷனுக்கும் நேரடியாக தேர்வு செய்யப்படுவார். இதனால் கடுப்பான கூல் சுரேஷ் நான் தான் இளிச்சவாயனா எனக் கத்தும் புரோமோ தற்போது வைரலாகி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in