
பெண்ணின் இடுப்பை வர்ணிக்கும் விதமாக பவா செல்லதுரை சொல்லிய கதையால் பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ் கடுப்பாகியுள்ளனர்.
பிக் பாஸ் 7 வீட்டிற்குள் போட்டியாளர்களில் ஒருவராக நுழைந்தவர் கதை சொல்லியும்,பிரபல எழுத்தாளருமான பவா செல்லதுரை. தான் வீட்டிற்குள் இருக்கும் வரை நடிகர் கமல்ஹாசன் தன்னை தினமும் ஒரு கதை சொல்லச் சொன்னதாக சொன்னார்.
அந்த வகையில் முதல் நாள் திருமணத்திற்குப் பிறகும் ஒரு பெண் தனது சொந்த கனவுகளை யாருக்காகவும் விட்டுவிடக்கூடாது என்ற கருத்தில் அவர் சொன்ன கதை பார்வையாளர்களையும், வீட்டில் போட்டியாளர்களையும் கவர்ந்தது.
ஆனால், நேற்று இவர் சொன்ன இன்னொரு கதை போட்டியாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் கதை மலையாள எழுத்தாளர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பற்றியது. இந்தக் கதைப்படி, எழுத்தாளர் பாலச்சந்திரன், தன் வீட்டுக்கு வந்த வேலைக்கார பெண்ணின் இடுப்பு வெண்ணைக்கட்டி போல் இருந்ததால் அதன் அழகில் மயங்கி அதனைத் தொட்டுவிட்டார்.
உடனே அந்த பெண் கோபமடைந்து அந்த எழுத்தாளரின் கன்னத்தில் பளார் என அறைந்ததாகவும், பின்னர் அவரைப் பற்றி தெரிந்து கொண்ட அந்த பெண் அவரிடம் மன்னிப்பு கேட்க, இல்லை தப்பு என் மேல்தான் என பாலச்சந்திரன் அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்டதாகவும் கூறி இருந்தார். பாலச்சந்திரன் பெரிய எழுத்தாளராக இருந்தும் இதை மறைக்காமல் தன் புத்தகத்தில் எழுதியுள்ளார் என பவா அவரைப் பற்றி பெருமைப்படுத்தும் விதமாக கூறியதுதான் ஹவுஸ்மேட்ஸ் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
யூடியூப் சேனலை மூடிவிட்டு, பைக்கை எரிச்சுடுங்க... டிடிஎஃப் வாசனிடம் ஆவேசமான நீதிபதி!
ஆசிய விளையாட்டுப் போட்டி; தங்கம் வென்று திருச்சி டிக்கெட் கலெக்டர் சாதனை!
அதிர்ச்சி... ரூ.2 லட்சத்துக்கு ஆசைப்பட்டு உயிரை விட்ட ஊழியர்!
ஆசிய விளையாட்டுப் போட்டி : ஸ்குவாஷில் தங்கப்பதக்கம் வென்றார் தினேஷ் கார்த்திக் மனைவி!
பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் 777 சார்லி பட நாய்; உறுதி செய்த தொகுப்பாளர்