பிக் பாஸ்7: நீ இல்லாம வாழ முடியாது... உளறிக்கொட்டும் மாயா... புலம்பித்தள்ளும் பூர்ணிமா!

மாயா கிருஷ்ணன்
மாயா கிருஷ்ணன்

பிக் பாஸ் வீட்டிற்குள் மாயாவும் பூர்ணிமாவும் சதி ஆலோசனையில் இருக்கும்படியான புரோமோ ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது.

பிக் பாஸ் வீட்டிற்குள் இரண்டாகப் பிரிந்திருக்கும் போட்டியாளர்கள் மத்தியில் சண்டை வெடித்திருக்கிறது. குறிப்பாக, போரிங்கான போட்டியாளர்கள் என வினுஷா, அக்‌ஷயாவை பிக் பாஸ் தேர்ந்தெடுத்து ஜெயிலுக்குள் அனுப்ப இருக்கிறார். இதனால், கன்டென்ட் கொடுக்க வேண்டும் என போட்டியாளர்கள் தாங்களாகவே வலிந்து பிரச்சினைகளை உருவாக்கி வருகின்றனர் இந்த சீசனில்.

ஸ்மால் பாஸ் வீட்டில் உள்ள ஆறு போட்டியாளர்களும், தங்களுக்கு ஒதுக்கப்பட்டது 7 போட்டியாளர்கள் என்றும், பவா செல்லதுரை வெளியேறிவிட்டதால் ஆறு போட்டியாளர்கள் மட்டுமே ஸ்மால் பாஸ் வீட்டில் உள்ளனர். எனவே எங்களால் வேலைகள் செய்ய முடியாது, என ஸ்ட்ரைக் செய்தனர். இதனால், இரண்டு வீட்டைச் சேர்ந்தவர்களும் பழம், ஸ்நாக்ஸ் சாப்பிட்டு பசியைப் போக்கினர். இந்தப் பிரச்சினையில் கேப்டன் சரவணன் தலையிட்டு தீர்வு சொன்னார்.

இந்தப் பிரச்சினை முடிந்தாலும், இன்னொரு பக்கம் பூர்ணிமாவும் மாயாவும் சதி ஆலோசனையில் ஈடுபட்டு இருக்கும்படியான புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அப்போது பூர்ணிமா இதுதான் என்னுடைய கடைசி வாரம் என தோன்றுகிறது என புலம்ப, அதற்கு மாயா நீ எல்லாம் இல்லனா நானும் வெளியில் வந்துருவேன்.

'பிக் பாஸ்’ வீட்டில்...
'பிக் பாஸ்’ வீட்டில்...

இவங்க கூட எல்லாம் மனுஷன் வாழ முடியாது என்கிறார். அதைபோல் இந்த முறை ஐஷுவை கேப்டனாக இறக்கினால், நாம தெறிக்க விடலாம் என கூறுகிறார். ஜோவிகா மற்றும் யுகேந்திரனை காட்டி, ‘இவர்களை நாம வச்சு செய்யணும்... நம்மகிட்ட வச்சிக்கவே கூடாது அப்படிங்கிற அளவுக்கு வச்சு செய்யணும்’ என மாயா பேசி வருகிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in