பிரதீப் வெளியேறிய விவகாரம்... பூர்ணிமா, மாயாவை வெளுத்த விசித்ரா!

பிக் பாஸ்7
பிக் பாஸ்7
Updated on
1 min read

ரெட் கார்டு கொடுத்து பிரதீப்பை வெளியேற்றிய விவகாரம் பிக் பாஸ் வீட்டுக்குள்ளும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

தகாத வார்த்தைகளில் பேசுகிறார், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை போன்ற காரணங்களைச் சொல்லி பிக் பாஸ் இல்லத்தில் இருந்து ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப் வெளியேற்றப்பட்டுள்ளார். பிரதீப் வெளியேறியதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்திருப்பது மட்டுமல்லாம், பல முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்களே பிரதீப்புக்குத் தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பிரதீப்புக்கு மாயா, பூர்ணிமா, ஜோவிகா, ரவீனா என இவர்கள் கேங்காக சேர்ந்து ரெட் கார்டு கொடுக்க வைத்து விட்டதாக பிக் பாஸ் இல்லத்திற்குள் சர்ச்சை வெடித்துள்ளது.

அதன்படி இந்த வார நாமினேஷனின் போது, ரெட் கார்டு விவகாரத்தில் குரூப்பாக விளையாடிருக்காங்க என சொல்லி விசித்ரா நாமினேட் செய்திருக்கிறார். இதையடுத்து மாயா அவரிடம் சென்று ’இது எவ்வளவு கேவலமான விஷயம் தெரியுமா’ என வாக்குவாதம் செய்திருக்கிறார்.

உடனே ஸ்மால் பாஸ் வீட்டில் இருந்த விசித்ராவும், அர்ச்சனாவும் மாயாவிடம் சண்டை போட்டுள்ளனர். ’வுமன் கார்டு எவ்வளவு பவர்புல்லானது என்பது உங்களுக்கு தெரியும். மனசாட்சி பிரகாரம் இதை நீங்க பயன்படுத்தி இருந்தீங்கனா பிரச்சினையே இல்ல, அப்படி யூஸ் பண்ணலன்னா நீங்க ஒருத்தரோட வாழ்க்கையை அழிச்சிருக்கீங்க, மனசுல வச்சிக்கோங்க’ என அர்ச்சனா சொன்னதும் பூர்ணிமா ஷாக் ஆகி உள்ளார். இதுகுறித்த புரோமோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

மேலும், ஸ்மால் பாஸ் இல்லத்தில் இருக்கும் புது வைல்ட் கார்டு போட்டியாளர்களுக்கும் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கும் சமைப்பதில் கடுமையான விவாதம் எழுந்திருப்பதாக இரண்டாவது புரோமோ வெளியாகியிருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in