பிக் பாஸ் தமிழ் 7... காதல் ஜோடி, சர்ச்சை நாயகன், பிரபல யூடியூபர்... இந்த சீசன் போட்டியாளர்கள் இவர்கள்தான்!

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

சின்னத்திரை ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து இருந்த பிக் பாஸ் தமிழின் ஏழாவது சீசன் கோலாகலமாக தொடங்கியுள்ளது. இந்த முறை பிக் பாஸ் வீடு இரண்டு என்பதால் அதற்கு ஏற்ப போட்டியாளர்களின் சண்டையும், சவால்களும் இந்த முறை கூடுதலாகவே இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர். வழக்கம் போலவே இந்த சீசனிலும் 18 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர். அடுத்த இரண்டு போட்டியாளர்கள் வைல்ட் கார்ட் எண்ட்ரி மூலம் விரைவில் இவர்களுடன் இணைய உள்ளனர்.

ஒவ்வொரு சீசனிலும் பிக் பாஸ் போட்டியாளர்கள் விஜய் டிவி பிரபலங்கள், வெளிநாட்டு மாடல்கள், பாடகர்கள், நடிகர்கள் என கலவையாக இருப்பார்கள். அந்த வகையிலேயே இந்த முறையும் போட்டியாளர்கள் தேர்வு இருந்தாலும் அதிக அளவு விஜய் டிவி பிரபலங்களின் முகங்களை பார்க்க முடிகிறது. இந்த சீசனில் போட்டியாளர்கள் யார் யார் என்பது குறித்து பார்க்கலாம்.

கூல் சுரேஷ்
கூல் சுரேஷ்

ஓரிரு படங்களில் நடித்த கூல் சுரேஷ் தற்பொழுது பல படங்களின் புரமோஷன்களில் கலந்து கொண்டு வருகிறார். சமீபத்தில் விழா மேடையில் பெண் தொகுப்பாளினிக்கு மாலை போட்டு சர்ச்சையில் சிக்கிக் கொண்டார். இதையடுத்து பல யூடியூப் சேனல்கள் மில்லியன் வியூஸ் எடுத்து தன்னால்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றன என்று சமீபத்தில் கண்ணீர் ஸ்டேட்மெண்ட் விட்டவர். சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாதவர். பிக் பாஸ் வீட்டுக்குள் இவரால் என்ன சண்டைகள் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

கவர்ச்சி படங்கள் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்ததில் பிரபலமானவர் விசித்ரா. சமீபத்தில் 'கு வித் கோமாளி' நிகழ்ச்சியிலும் பங்கு பெற்றார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

'கனா காணும் காலங்கள்', 'ஆஃபிஸ்' போன்ற தொடர்களில் நடித்து பிரபலமானவர் விஷ்ணு. இவருக்கும் சின்னத்திரை நடிகர் ஆயிஷாவுக்கும் சமீபத்தில் பிரேக்கப் ஆனது. கடந்த சீசனில் ஆயிஷாவுடன் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த சீசனில் நுழைந்திருக்கிறார்.

விஷ்ணு
விஷ்ணு

சின்னத்திரை நடிகையான ரவீனாவுக்கும் டான்ஸ் கோரியோகிராஃபர் மணி சந்திராவுக்கு காதல் என கிசுகிசுக்கப்படும் நிலையில், இந்த சீசனில் இருவரும் ஜோடியாக நுழைந்துள்ளனர். காதல், டான்ஸ் என எண்டர்டெயின்மெண்ட்க்கு நிச்சயம் குறைவிருக்காது.

தவிர, 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' குமரன் முதலில் நுழைவதாக இருந்து, பிறகு வேறு பிரச்சினை காரணமாக அவர் போக முடியவில்லை. அதற்கு பதிலாக, அந்த சீரியலில் உள்ள சரவணன் இந்த சீசனுக்குள் நுழைந்திருக்கிறார். மேலும் கடந்த சீசனில் கலந்து கொண்ட டான்சர் அமீரின் தங்கையான ஐசுவும் இதில் கலந்து கொள்கிறார்.

ரவீனா
ரவீனா

முன்பே கசிந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகாவும் நுழைந்திருக்கிறார். அம்மா போலவே நிகழ்ச்சியில் பஞ்சாயத்தையும், சுவாரஸ்யத்தையும் கூட்டுவாரா என்பதை பார்க்கலாம்.

இவர்கள் தவிர, மாடல் அனன்யா ராவ், எழுத்தாளர் பவா செல்லத்துரை, நடிகர்கள் அக்‌ஷயா, 'பாரதி கண்ணம்மா' புகழ் வினுஷா தேவி, மாயா கிருஷ்ணன், 'டாடா' புகழ் பிரதீப் ஆண்டனி, மாயா, மலேசஷியா வாசுதேவன் மகனும் பாடகருமான யுகேந்திரன், டான்சர் விஜய் வர்மா, மாடல் மூன் நிலா, ராப்பர் நிக்ஸன், யூடியூபர் பூர்ணிமா ரவி ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in