பிக் பாஸ்7: ஒரு வாசல், ரெண்டு வீடு... இந்த சீசனின் வீடு எப்படி?

பிக் பாஸ்7
பிக் பாஸ்7

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தொடங்கி விட்டது. ஒவ்வொரு சீசனிலும், ஒவ்வொரு தீமில் இருக்கும் பிக் பாஸ் வீடு இந்த சீசனில் எப்படி இருக்கிறது?

பிக் பாஸ் சீசனில் பசுமை தீம், கோல்டன் தீம், கலர்ஃபுல் தீம் என ஒவ்வொரு சீசனிலும் வீட்டின் தீம் என்பதை சுவாரசியமாக வடிவமைத்திருப்பார்கள். இந்த சீசனில் இரண்டு வீடு ஒரு வாசல் என இரண்டு வீட்டையும் அசத்தலாக அமைத்திருந்தார்கள். சீசன் தொடங்கியதுமே கமல்ஹாசன் உள்ளே சென்று வீட்டை சுற்றி காண்பிப்பார். ஆனால், இந்த முறை வித்தியாசமாக இன்னொரு கமல்ஹாசன் அதாவது டூயல் ஆக்டில் கமல்ஹாசன் உள்ளே போய் வீட்டைச் சுற்றிக் காட்ட அகம் டிவி வழியே ஹோஸ்ட் கமல், பார்வையாளர்களோடு சேர்ந்து வீட்டைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

பிக்பாஸ் வீடு
பிக்பாஸ் வீடு

ஏழாவது சீசன் வீடு பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என்பதால் புது ஆர்ட் டீமை அழைத்திருப்பதாக முன்பு தகவல் வெளியானது. அதற்கேற்றாற் போலவே இரண்டு வீடுகளையும் கலர்ஃபுல்லாக வடிவமைத்து இருக்கிறார்கள். ஒரு வீடு போட்டியாளர்களுக்கும் இன்னொரு வீடு ஜெயில் என்றும் முன்பு இணையத்தில் ரசிகர்கள் சொன்னார்கள். ஆனால், அது குறித்தான சஸ்பென்ஸை கமல் இன்னும் உடைக்கவில்லை. கன்ஃபெஷன் ரூம் சேரின் பின்னால், ஏஞ்சல் இறக்கையோடு அமைத்துள்ளார்கள்.

பிக்பாஸ் வீடு
பிக்பாஸ் வீடு

இரண்டு வீட்டுக்கும் ஒரே வாசல் போல ஒரே கிச்சன் தான். வீடு முழுவதும் பெரும்பாலும் ப்ளூ கலரில் இருக்கும் படி வடிவமைத்து இருந்தார்கள். முதல் வீட்டில் ஏழு பெட்ரூம் அமைத்து இருந்தார்கள். வீட்டின் முதல் போட்டியாளராக கூல் சுரேஷ் நுழைந்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in