வாடா, போடா எனக் கத்திய ஜோவிகா... அனல் பறக்கும் பிக் பாஸ் வீடு!

பிக் பாஸ் வீட்டில் ஜோவிகா
பிக் பாஸ் வீட்டில் ஜோவிகா

பிக் பாஸ் வீட்டில் ஜோவிகா வயது வித்தியாசம் பார்க்காமல் ‘வாடா, போடா’ எனப் பேசியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

பிக் பாஸ் தமிழின் ஏழாவது சீசனில் இரண்டாவது வாரம் தொடங்கி இருக்கிறது. முதல் வாரத்தில் அனன்யா குறைந்த வாக்குகள் அடிப்படையில் வெளியேற்றப்பட, அதனைத் தொடர்ந்து பவா செல்லதுரையும் உடல்நிலையைக் காரணம் காட்டி வெளியேறி இருக்கிறார். இதனால், இந்த வாரம் எலிமினேஷன் இருக்காது என பிக் பாஸ் கூறியுள்ளார்.

பிக் பாஸ்7 வீடு
பிக் பாஸ்7 வீடு

இந்த வாரத்தில் வீட்டின் கேப்டனாக ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சரவணன் இருக்கிறார். இந்த வாரத்தில் இன்னொரு பிக் பாஸ் இல்லத்திற்குள் பிரதீப், கூல் சுரேஷ், மாயா, ஐஷூ, விஷ்ணு ஆகியோர் உள்ளனர். ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்கள்தான் வீட்டின் சமையல், கிளீனிங் எல்லாம் பார்க்க வேண்டும்.

அந்த வகையில், ஜோவிகா உணவுப் பொருளை வீணாக்குவதாக பிரதீப் சண்டையை ஆரம்பித்துள்ளார். அதற்கு ஜோவிகா, ‘சரிடா, நான் சப்பாட்டை வீணாக்குவதாகவே வச்சுக்கோ! அதுக்காக நீ சமைக்க மாட்டேன்னு எப்படி சொல்லுவ? அதுதாண்டா உன் வேல!’ எனக் கத்தியுள்ளார்.

இந்த புரோமோதான் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. ஜோவிகா உருவத்தில் வனிதாவை பார்த்து விட்டோம் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இதற்கு முன்பு விசித்ரா கல்வி பற்றி பேசியபோது, ஜோவிகா எல்லோர் முன்னிலையிலும் குரலை உயர்த்தி பேசியது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in