பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் போக வேண்டாம் என்று சொன்னேன்! - ரவீனா அம்மா லதா பேட்டி

ரவீனா
ரவீனா

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கிறது. நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் அறிவிக்கப்பட்டபோதே, காதல் கன்டென்ட் கொடுக்கப் போகும் ஜோடிகள் என மணி-ரவீனாவை பலரும் சொல்லி வந்தனர். இந்த நிலையில், ரவீனாவின் விளையாட்டு குறித்தும் மணி-ரவீனாவின் காதல் கிசுகிசுக்கள் குறித்தும் ரவீனாவின் அம்மா லதா நம்மிடம் பேசினார்.

பிக் பாஸ் நிகழ்சிக்கு முதல் அழைப்பு வந்தபோது உங்க ரியாக்‌ஷன் என்ன?

ரவீனா அம்மா லதா...
ரவீனா அம்மா லதா...

பிக் பாஸ் வாய்ப்பு வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. ரவீனாவை பிக் பாஸ் நிகழ்ச்சிக்குக் கேட்டபோது வேண்டாம் என்றுதான் மறுத்தோம். “நமக்கு செட் ஆகாது. நீ என்னதான் நல்லவளாக இருந்தாலும் வெளியே நெகட்டிவாக பேசவும் வாய்ப்புண்டு” என்று அவளிடம் சொன்னேன்.

சேனல் தரப்பிலும் இது பற்றி பேசினோம். நாங்கள் சொன்ன காரணத்தைக் கேட்ட அவர்கள், “இதெல்லாம் ஸ்கிர்ப்டட் இல்லை. ரவீனா எப்படி இருக்க வேண்டுமோ அப்படியே இருந்தால் நெகட்டிவிட்டிக்கு வாய்ப்பில்லை” என்று சொன்னார்கள். ரவீனாவுக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் போக ஆர்வம் இருந்ததால் ஒத்துக்கொண்டாள்.

ஒவ்வொரு சீசனிலும் ஒரு காதல் கிசுகிசு ஓடும். அப்படி இந்த சீசனில் ரவீனா-மணி ஜோடியின் பெயர் அடிபடுகிறது. அதை அவர்களும் ஒத்துக்கொண்டார்களே..?

மணி- ரவீனா
மணி- ரவீனா

மணியும் ரவீனாவும் முதலில் டான்சர்கள். அதுவும் இல்லாமல் மணி விஜய் டிவி சேனலின் டான்ஸ் கொரியோகிராஃபர் என்பதால் நீண்ட நாட்களாகவே இருவரும் நண்பர்கள். அவர்களுடைய நட்பைப் பார்த்து பலரும் காதலா எனக் கேட்டார்கள். பிக் பாஸ் வீட்டுக்குள்ளும் அப்படித்தான் கேட்டிருக்கிறார்கள். வெளியே இருப்பது மட்டுமே ரியாலிட்டி. உள்ளே இருக்கும் மூன்று மாதங்களில் அவர்கள் நடந்து கொள்வதையும் பேசிக்கொள்வதையும் வைத்து எதையும் முடிவு செய்ய முடியாது. எனக்கும் அவர்களைப் பற்றி நன்றாகத் தெரியும்.

உண்மையை சொல்ல வேண்டுமானால், தாங்கள் இருவரும் பிக் பாஸ் வீட்டுக்குள் போகிறோம் என்பது மணிக்கும் ரவீனாவுக்கும் முதலில் தெரியவே தெரியாது.

முதல் வாரத்திலேயே ரவீனா ஸ்மால் பாஸ் வீட்டுக்குப் போய்விட்டார். இப்போது பிக் பாஸ் இல்லத்தில் அவரது விளையாட்டு எப்படி இருக்கிறது?

சிறுவயதில் ரவீனா...
சிறுவயதில் ரவீனா...

அவள் இன்னும் தீவிரமாக விளையாட வேண்டும். நாட்கள் செல்லச் செல்லத்தான் விளையாட்டு இன்னும் தீவிரமாகும் என நினைக்கிறேன். அவள் பயங்கர சுட்டி. இந்த வாலுத்தனத்தை அங்கேயும் செய்தால் முதல் வாரத்திலேயே பனிஷ்மென்ட் வாங்குவ என சொல்லித்தான் அனுப்பினேன். பிக் பாஸ் வீட்டை அவள் ‘குக் வித் கோமாளி’ செட் போலத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறாள். பிக் பாஸ் கேமுக்குள் அவள் வர கொஞ்ச நாளாகும்.

நிகழ்ச்சி ஆரம்பித்து இரண்டு வாரங்கள் ஆகிறது... ஒரு பார்வையாளராக பிக் பாஸ் உங்களுக்கு எப்படி இருக்கிறது?

 ரவீனா
ரவீனா

சுவாரஸ்யமாகத்தான் செல்கிறது. உடை நாகரிகமாக போட வேண்டும் எனக் காரணம் சொல்லி ஐஷூவை விசித்ரா முதல் வாரத்தில் நாமினேட் செய்தது எல்லாம் ஏற்றுக்கொள்ளவே முடியாதது. உடை என்பது ஒவ்வொருவரின் வசதிதான். அதேபோல பிக் பாஸ், ஸ்மால் பாஸ் இல்லத்தில் இரண்டு போட்டியாளர்களும் சமைக்க மாட்டோம் என சண்டையிட்டது இந்த வாரத்திற்கான நல்ல கன்டென்ட்.

ரவீனாவுக்குப் போட்டியாக நிச்சயம் ஜோவிகா, பூர்ணிமா, மாயா என சக வயது போட்டியாளர்கள் வலுவாக இருப்பார்கள் என நினைக்கிறேன். அதேபோல, கூல் சுரேஷூம் ரவீனாவைப் போலவே இன்னும் குழந்தைத்தனமாக இருக்கிறாரோ எனத் தோன்றுகிறது. ரவீனாவின் சுட்டித்தனம் குறைந்து இன்னும் அவள் மெச்சூர்டாக இந்த நிகழ்ச்சி மூலம் மாறுவாள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in