`மன்னித்து விடுங்கள்; பிக் பாஸை நான் சரியாகப் பயன்படுத்தவில்லை'- ஐஷூ உருக்கம்!

பிக் பாஸ் ஐஷூ
பிக் பாஸ் ஐஷூ

பிக் பாஸ் என்ற பெரிய மேடையை நான் சரியாகப் பயன்படுத்தவில்லை என ஐஷூ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து தான் மிகவும் குற்றவுணர்ச்சியில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

பிக் பாஸ் தமிழின் ஏழாவது சீசனில் கடந்த வாரத்திற்கு முந்தின வாரம் குறைந்த மக்கள் வாக்குகள் அடிப்படையில் ஐஷூ வெளியேற்றப்பட்டார். இவர் பிக் பாஸ் விளையாட்டை சரியாகப் புரிந்து கொள்ளாமல் மாயா, பூர்ணிமா கேங்குடன் சேர்ந்து விளையாடியது மற்றும் நிக்சனுடன் அத்துமீறி நடந்து கொண்டது போன்ற விஷயங்கள் அவர் வெளியேறியதற்கு முக்கிய காரணமாக ரசிகர்களால் சொல்லப்பட்டது.

இந்த நிலையில், வெளியே வந்து ஒருவாரம் ஆகியுள்ள நிலையில், ஐஷூ தற்போது நீண்ட, உருக்கமான கடிதம் ஒன்றைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், ‘பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான் நன்றாக விளையாடுவேன் என என் மீது நம்பிக்கை வைத்த அனைவரையும் நான் ஏமாற்றிவிட்டேன். என்னை மன்னித்து விடுங்கள். பிக் பாஸ் என்ற பெரிய தளத்தை நான் சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டேன். என் குடும்பத்திற்கு அவப்பெயர் வாங்கித் தந்தது மட்டுமல்லாமல், என்னைப் போன்ற பெண்களையும் நான் ரெப்ரசென்ட் செய்து வந்ததையும் சரியாக செய்யவில்லை. என் மீது எனக்கே மரியாதை இல்லாமல் போய்விட்டது.

21 வயதில் உள்ளே எப்படி விளையாட வேண்டும் என்ற விஷயம் புரியாமல் இந்த பிக் பாஸ் தளத்தை விட்டுவிட்டேன். நான் செய்த தவறுக்கு என்னைத் திட்டுங்கள். எனது குடும்பத்தை எதுவும் சொல்ல வேண்டாம்’ என குறிப்பிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in