பிக் பாஸ்7: சின்ன பிக் பாஸ் குரல் யாருடையது தெரியுமா?

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

இரண்டாக பிரிந்திருக்கும் இந்த பிக் பாஸ்7 வீட்டின் இன்னொரு பிக் பாஸ் குரல் யாரென்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

பிக் பாஸ் தமிழின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பவா செல்லதுரை, வினுஷா, ஜோவிகா, பிரதீப், அனன்யா, பூர்ணிமா, விஜய் வர்மா, நிக்சன், விஷ்ணு, ரவீனா, மணிச்சந்திரா, யுகேந்திரன், ஐஷூ, சரவணன், விசித்ரா, அக்‌ஷயா என 18 போட்டியாளர்கள் உள்ளே உள்ளனர். இதில், முதல் வாரத்தின் கேப்டனான விஜய்யை குறைவாக கவர்ந்த ஆறு போட்டியாளர்கள் பிக் பாஸூக்குள் இருக்கும் இரண்டாவது இல்லத்திற்குள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சாஷோ சதீஸ் சாரதி
சாஷோ சதீஸ் சாரதி

அங்கும் ஒரு சின்ன பிக் பாஸ் இருக்கிறார். அந்த ஆறு போட்டியாளர்களை கலாய்ப்பது, அவ்வப்போது ஸ்ட்ரிக்ட்டாக இருப்பதுமாக இருக்கிறார் இந்த சின்ன பிக் பாஸ். வழக்கமாக பிக் பாஸ் தமிழ் சீசனுக்கு சாஷோ சதீஸ் சாரதி என்பவர்தான் இத்தனை சீசன்களாக குரல் கொடுத்து வருகிறார் என்பது பார்வையாளர்களுக்குத் தெரியும். ஆனால், இப்போது இரண்டாவது இல்லத்தில் இருக்கும் சின்ன பிக் பாஸ் குரல் யாருடையது என்றத் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையைச் சேர்ந்த தியேட்டர் ஆர்டிஸ்ட்டான அரவிந்தன் என்பவர்தான் இந்த சின்ன பிக் பாஸ் குரலுக்குச் சொந்தமானவர். சினிமாவில் முயற்சி செய்து வந்தவருக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in