பிக் பாஸ்7 நிகழ்ச்சியில் முதல் ரெட் கார்டு... பரபரப்பு கிளப்பும் போட்டியாளர்!

பிக் பாஸ்7
பிக் பாஸ்7

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த சீசனில் முதல் ரெட் கார்டு கொடுக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ்7 நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்தே பரபரப்புகளுக்கு பஞ்சம் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. காதல் ஜோடிகள், ஐந்து வைல்ட் கார்டு போட்டியாளர்கள் என போய்க் கொண்டிருக்கிறது. இதில் விஜய் வர்மா பிக் பாஸ் இல்லத்திற்கு உள்ளே இருக்கும்போது சக போட்டியாளரிடம் எல்லை மீறி பேசியதால் யெல்லோ கார்டு கொடுத்து கமல்ஹாசனால் எச்சரிக்கப்பட்டார்.

இந்த நிலையில், தற்போது பிக் பாஸின் இந்த சீசனில் பிரதீபுக்கு ரெட் கார்டு கொடுக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பிரதீப்-ஜோவிகா
பிரதீப்-ஜோவிகா

உள்ளே, கழிவறையை திறந்து வைத்துக் கொண்டு போனது, கடந்த சீசனில் கவினை அறைந்தது அட்டென்ஷனுக்காகதான் என்று சொன்னது, பிக் பாஸ் வீட்டில் அதிக ஓட்டுகள் கிடைக்க விஷ்ணு வெளியில் பணம் கொடுத்து பி.ஆர். டீம் வைத்திருக்கிறார்கள் என விசித்ரா, தினேஷ் ஆகியோரிடம் சொன்னது என சர்ச்சையைக் கிளப்பும் விதமாகவே அவர் பேசி வருகிறார்.

மேலும், பிக் பாஸ் இல்லத்தில் சண்டையின் போது போட்டியாளர்களிடம் அத்துமீறி பேசியதும் ரெட் கார்டுக்கு காரணம் என சொல்லப்படுகிறது. இதுகுறித்து இன்று ஒளிபரப்பாகும் எபிசோடில் தெரியவரும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in