ட்விட்டர் ட்ரெண்டிங்கில் பிக்பாஸ் விக்ரமன்: காரணம் என்ன?

பிக்பாஸ் விக்ரமன்
பிக்பாஸ் விக்ரமன்ட்விட்டர் ட்ரெண்டிங்கில் பிக்பாஸ் விக்ரமன் - காரணம்..?

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து பல வாரங்கள் ஆனாலும் சமூக வலைதளங்களில் அதன் தாக்கம் குறைந்தப்பாடு இல்லை. குறிப்பாக அசீம் - விக்ரமன் ஆதரவாளர்களிடையேயான வார்த்தை போர் தொடர்ந்துக் கொண்டிருக்கிறது.

பிக்பாஸ் சீசன் 6 - ல் 21 போட்டியாளர்கள் பங்கேற்றனர். அதில் அசீம், விக்ரமன், ஷிவின் மூவரும் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். குறிப்பாக அசீம் - விக்ரமனிடையே பலத்த போட்டி ஏற்பட்டது. இதில் அசீம் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இதனால் கோபமடைந்த விக்ரமன் ஆதரவாளர்கள் அசீமுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கொந்தளித்தனர்.

இதன் தொடர்ச்சியாக விக்ரமன் மற்றும் பிக்பாஸ் போட்டியாளர்கள் தங்களது அனுபவங்களை பல்வேறு ஊடகங்களின் வாயிலாக தெரிவித்து வருகின்றனர். அதில் பலரும் அசீமுக்கு எதிராகவும் விக்ரமனுக்கு ஆதரவாகவும் பேசி வருகின்றனர். குறிப்பாக மகேஸ்வரி, ஷிவின், ஏடிகே உள்ளிட்டோர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். விக்ரமனும் அசீமுக்கு எதிராக பேசி வருகிறார்.

ட்விட்டர் ட்ரெண்டிங்
ட்விட்டர் ட்ரெண்டிங்ட்விட்டர் ட்ரெண்டிங்கில் பிக்பாஸ் விக்ரமன் - காரணம் என்ன..?

அந்த கருத்துக்களை விக்ரமனின் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு அசீமுக்கு எதிராக கொந்தளித்து வருகின்றனர். குறிப்பாக #Totalwinnervikaraman என்ற டேக் செய்து கருத்துக்களை பதிவிட்டு வருவதால் விக்ரமன் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளார். இவ்வளவு நாட்கள் கடந்த பிறகும் இது தேவைத்தான எனவும் சிலர் கடுப்படிக்கின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in