'பிக் பாஸ் அல்டிமேட்’ நிகழ்ச்சி தொகுத்து வழங்கும் சிம்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு

சிலம்பரசன்
சிலம்பரசன்

'பிக் பாஸ் அல்டிமேட்’ நிகழ்ச்சியை, நடிகர் சிலம்பரசன் தொகுத்து வழங்க இருப்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ‘பிக் பாஸ் சீசன் 5’ நிகழ்ச்சி முடிவடைந்ததை அடுத்து, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் 'பிக் பாஸ் அல்டிமேட்’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

இதில், கடந்த 5 சீசன்களிலும் பங்கேற்ற போட்டியாளர்களிலிருந்து சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டு இடம்பெற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். இந்நிலையில் விக்ரம் பட ஷூட்டிங் பாதிக்கப்படுவதால், இந்த நிகழ்ச்சியில் இருந்து கமல் விலகிவிட்டார்.

இதையடுத்து இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது யார் என்ற கேள்வி எழுந்தது. நடிகர் சிம்பு தொகுத்து வழங்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகி வந்த நிலையில், இன்று அது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் டிவிட்டரில், ’எதிர்பார்க்கலை இல்ல, நானே எதிர்பார்க்கலை, பார்க்கலாமா?’ என்று நடிகர் சிம்புவின் ப்ரொமோ வீடியோவையும் வெளியிட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in