பிக்பாஸ் அல்டிமேட்: வனிதாவின் பதிவு; கண்டித்த சிம்பு!

பிக்பாஸ் அல்டிமேட்: வனிதாவின் பதிவு; கண்டித்த சிம்பு!

பிக்பாஸ் அல்டிமேட்டில் இருந்து நேற்று சிநேகன் வெளியே வந்துள்ள நிலையில் போட்டியாளர்கள் சந்தித்துள்ளனர். மேலும் பிக்பாஸ் அல்டிமேட்டில் நேற்றைய எபிசோட்டின் ஹைலைட்டையும் இங்கு பார்க்கலாம்.

புகழ்பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் தமிழ் ஓடிடி வடிவமாக பிக்பாஸ் அல்டிமேட் தற்போது 24x7 என நேரலையாக டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. 40 நாட்களை நிகழ்ச்சி கடந்திருக்கும் நிலையில் நடிகர் சிலம்பரசன் இதனை தொகுத்து வழங்கி வருகிறார்.

சுரேஷ் சக்ரவர்த்தி, 'கலக்க போவது யாரு?' சதீஷ், தற்போது ரம்யா பாண்டியன் என பிக்பாஸ் தமிழ் வரலாற்றிலேயே முதல் முறையாக மூன்று வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் உள்ளே அனுப்பப்பட்டிருக்கிறார்கள். கடந்த வாரம் குறைந்த மக்கள் வாக்குகள் அடிப்படையில் 'தாடி' பாலாஜி வெளியேற்றப்பட்டார். அவர் நிகழ்ச்சியில் ஆக்ட்டிவாக பங்கேற்காமல் பெரும்பாலான நேரம் தனியாக இருந்ததும் ஒரு காரணமாக பார்க்கப்பட்டது.

இந்த வாரம் கவிஞர் சிநேகன் குறைந்த வாக்குகள் அடிப்படையில் வெளியேற்றப்பட்டு இருக்கிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பே சிநேகன் குறைந்த வாக்குகள் பெற்றிருந்ததால் வெளியேற்றப்படுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. முதல் சீசனில் ரன்னராக வந்த சிநேகன் இந்த சீசனில் பாதியிலே வெளியேற ரம்யா பாண்டியனின் வரவும் அதனால் ஓட்டுகள் பிரிக்கப்பட்டதும் முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், நிகழ்ச்சியில் இருந்து வெளியேற பிக்பாஸ் போட்டியாளர்கள் சந்தித்து கொள்வது வழக்கம். அந்த வகையில், வனிதா, அவரது மகள், 'தாடி' பாலாஜி, சிநேகன் அவரது மனைவி கன்னிகா ஆகியோர் சந்தித்துள்ளனர். இந்த புகைப்படங்களை வனிதா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து 'இது தான் ரியல் அல்டிமேட் நண்பர்கள்' என மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

மேலும், நேற்று பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் சிம்புவின் மூன்றாவது வாரம். இரண்டு வாரங்கள் போட்டியாளர்களிடம் விட்டு கொடுத்து பேசிய சிம்பு இந்த வார எபிசோட்டில் சீரியஸ் மோடுக்கு மாறியிருந்தார். கடந்த வாரம் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே வந்த ரம்யாவை வரவேற்றவர் கடந்த வாரம் போட்டியாளர்கள் ரேங்க்கிங் டாஸ்கில் மெத்தனமாக நடந்து கொண்டது, சதீஷின் குறைவான ஆர்வம் ஆகியவற்றை கண்டித்தார். நிகழ்ச்சியின் இறுதியில், 'ஜாலியா பேசறேன்னு அட்வான்ட்டேஜ் எடுத்துக்காதீங்க. உங்கள வெளுத்து வாங்க சொல்லி மக்கள் எனக்கு பவர் கொடுத்து இருக்காங்க. நான் தான் அன்பு பாதையில போயிட்டு இருக்கேன். பிக்பாஸை அவமதிக்காதீங்க. நீங்க ஒழுங்கா இருந்தாதான் நான் சிம்பு. இல்லைன்னா வம்புதான்" என போட்டியாளர்களின் விளையாட்டை எச்சரித்து பேசினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in