பிக்பாஸ் அல்டிமேட்: பணப்பெட்டியுடன் சுருதி எடுத்த அதிரடி முடிவு!

பிக்பாஸ் அல்டிமேட்: பணப்பெட்டியுடன் சுருதி எடுத்த அதிரடி முடிவு!

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து நடிகை சுருதி அதிகபட்ச பணத்துடன் வெளியேறி இருக்கிறார்.

டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டாரில் 24x7 என பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த ஜனவரி இறுதியில் இருந்து ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. நிகழ்ச்சி முடிய இன்னும் சில வாரங்களே இருக்கிறது. இறுதிக்கட்டத்தை நெருங்கும் இந்த நிகழ்ச்சியில் யார் டைட்டில் வின்னர் என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே இருக்கிறது. தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் இருந்து நடிகர் கமல்ஹாசன் விலகியது, அவருக்கு பதிலாக நடிகர் சிலம்பரசன் தொகுப்பாளராக வந்தது, மூன்றிற்கும் மேற்பட்ட வைல்ட் கார்ட் என்ட்ரிகள், சர்ச்சை சண்டை என இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியும் மற்ற பிக்பாஸ் சீசன்களை போலவே நகர்ந்தது.

பொதுவாகவே, பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கும்போது அந்த வார எலிமினேஷனுக்கு முன்பு பணப்பெட்டியை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைப்பார்கள். பணப்பெட்டியுடன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற நினைப்பவர்கள் காரணத்தை மற்ற போட்டியாளர்களிடமும் பிக்பாஸிடமும் தெரிவித்துவிட்டு வெளியேற வேண்டும். அந்த வகையில் மூன்றாவது சீசனில் கவின், நான்காவது சீசனில் கேபி, ஐந்தாவது சீசனில் சிபி ஆகியோர் பணப்பெட்டியை எடுத்து கொண்டு வெளியேறியது இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

இப்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இந்த வாரம் பணப்பெட்டியை பிக்பாஸ் அனுப்பி இருக்கிறார். இதில் ஒன்பது லட்சம் முதல் பதினைந்து லட்சம் வரையிலுமே அடுத்தடுத்து பணப்பெட்டி மாறி கொண்டே வந்தது. இதில் சுருதிக்கும் ஜூலிக்கும் கடுமையான விவாதம் ஏற்பட்டு இறுதியில் சுருதி பதினைந்து லட்ச ரூபாய் பணப்பெட்டியுடன் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார். பிக்பாஸ் ஐந்தாவது சீசனிலேயே சுருதி தனித்துவமாக விளையாடினார். ஆனால், தாமரையுடன் காயின் விவகாரத்தில் ஏற்பட்ட விவாதம் அவருக்கு பின்னடைவாக மாற ஐந்தாவது சீசனில் எலிமினேஷன் ஆனார்.

இந்த நிலையில், சுருதி பிக்பாஸ் தமிழ் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு அதிகபட்ச பணத்தொகையுடன் வெளியேறி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in