சினிமாவுக்குள் என்ட்ரியாகும் பிக்பாஸ் தாமரைச்செல்வி!

சினிமாவுக்குள் என்ட்ரியாகும் பிக்பாஸ் தாமரைச்செல்வி!

பிக்பாஸ் புகழ் தாமரைச்செல்வி தற்போது சினிமாவுக்குள்ளும் என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.

பிக்பாஸ் தமிழின் ஐந்தாவது சீசனில் நாடகக் கலைஞராக உள்ளே வந்தவர் தாமரைச்செல்வி. அந்த நிகழ்ச்சியில் அவரது வெள்ளந்தியான குணமும், பாடல்களும் ரசிகர்களிடையே அவரைப் பிரபலமாக்கியது. ஆரம்பத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி புரியாமல் தடுமாறியவர் பின்பு போக போக நிகழ்ச்சியின் போக்கிற்கு ஏற்றது போல தன்னை மாற்றிக் கொண்டார். பிக்பாஸ் ஐந்தாவது சீசனின் இறுதிக்கட்டத்தில் கடைசி ஐந்து போட்டியாளர்களில் ஒருவராக வந்தார் தாமரைச்செல்வி.

இந்த சீசன் முடித்து அடுத்து தொடங்கிய பிக்பாஸ்ஸின் ஓடிடி வடிவமான பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார் தாமரைச்செல்வி. பின்பு விஜய் டிவியின் பிக்பாஸ் ஜோடிகள் நடன ரியாலிட்டி நிகழ்ச்சி உள்ளிட்ட பல நிகழ்வுகளிலும் தனது கணவருடன் கலந்து கொண்டார்.

மேலும் பல நேர்காணல்களில் இவருக்கு சினிமாவில் நடிக்க விருப்பம் உண்டா என்று கேட்கப்பட்டபோது, வாய்ப்பு கிடைத்தால் அக்கா, அண்ணி கதாபாத்திரங்களில் நடிக்கத் தயார் என்று சொல்லி இருந்தார். இதனை அடுத்து, தற்போது அவர் சினிமாவில் என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.

ரோபோ ஷங்கர், சிங்கம்புலி நடிக்க இருக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார் தாமரைச்செல்வி. சிங்கம்புலியுடன் இருக்கும் புகைப்படத்தைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருப்பவர் ‘படப்பிடிப்பின் போது’ என்ற கேப்ஷனுடன் பகிர்ந்திருக்கிறார். தாமரைச்செல்வியின் இந்தப் புதிய பயணத்திற்கு பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in