பிக்பாஸ் ஆறாவது சீசன் தள்ளிப் போகிறதாம்: காரணம் இதுதான்?

பிக்பாஸ் ஆறாவது சீசன் தள்ளிப் போகிறதாம்: காரணம் இதுதான்?

பிக்பாஸ் ஆறாவது சீசன் அடுத்த மாதம் தொடங்க இருக்கும் நிலையில், தற்போது அது தள்ளிப் போகிறது.

உலகப்புகழ் பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் ஐந்து சீசன்களை முடித்து இருக்கிறது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பியது மட்டுமில்லாமல், பிக்பாஸ் அல்டிமேட் என 24 மணி நேரமும் ஓடிடி தளத்திற்காக பிரத்யேகமாக ஒரு சீசனும் ஒளிபரப்பானது. ஐந்து சீசன்களையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்க, ஓடிடி சீசனை நடிகர் சிலம்பரசன் தொகுத்து வழங்கினார்.

ஒவ்வொரு சீசனும் வழக்கமாக ஜூன் இறுதி வாரம் அல்லது ஜூலை முதல் வாரத்தில் தொடங்க இருந்த நிலையில் கரோனா காரணமாக கடந்த இரண்டு சீசன்களும் அக்டோபர் மாதத்தில் தொடங்கியது. அதேபோல, இந்த ஆறாவது சீசனும் அக்டோபர் முதல் வாரத்தில் அதாவது 2-ம் தேதி முதல் ஒளிபரப்பு தொடங்கும் என தகவல் வந்தது. ஆனால், தற்போது தமிழகத்தில் தீவிரமெடுக்கும் டெங்கு, பன்றிக்காய்ச்சல் காரணமாக அக்டோபர் 2-ம் தேதியில் இருந்து 9-ம் தேதிக்கு தள்ளிப்போகிறது பிக்பாஸ் ஆறாவது சீசன்.

எந்த சீசனிலும் இல்லாமல் இந்த சீசனில் முதல்முறையாக மக்கள் நேரடியாக பங்கேற்கும்படி அறிவித்திருந்தார்கள். கடந்த ஐந்தாவது சீசன் மற்ற சீசன்களை விடவும் டி.ஆர்.பியில் குறைவாக இருந்ததால் இந்தமுறைப் போட்டியாளர்கள் தேர்வில் சேனல் தரப்பு கூடுதல் கவனம் செலுத்துவதாகவும் சொல்லப்படுகிறது. தொலைக்காட்சியில் இரவு 9.30 மணிக்கு ஒரு மணி நேர ஒளிப்பரப்பும் இதனுடைய அன்கட் வெர்ஷன் அதாவது 24 மணிநேர ஒளிபரப்பு ஓடிடி தளத்தில் வெளியிட நிகழ்ச்சி தரப்பு திட்டமிட்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in