'பிக் பாஸ்' 6வது சீசன் ஆரம்பம்: ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு என்னவாகும்? - கமல்ஹாசனின் மாஸ்டர் பிளான்!

'பிக் பாஸ்' 6வது சீசன் ஆரம்பம்: ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு என்னவாகும்? - கமல்ஹாசனின் மாஸ்டர் பிளான்!

கமல்ஹாசன் பிக் பாஸ் -6 வது சீசனை தொகுத்து வழங்க மாட்டார். அவர் சினிமாவில் மீண்டும் பிசியாகி விட்டார் எனக் கூறப்பட்ட நிலையில், 6வது சீசனையும் நானே தொகுத்து வழங்குவேன் என கமல் மீண்டும் தொலைக்காட்சி பக்கம் ஒதுங்கியது குறித்து ஏகப்பட்ட ட்ரோல்களும், கேள்விகளும் வரிசைக் கட்டியுள்ளது.

அதாவது பிக் பாஸ் சீசன் 6 வது நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்க ஆரம்பித்தால் மீண்டும் ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு பாதிக்குமே என்கிற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி உள்ளனர். ஆனால், அதற்கும் கமல்ஹாசன் பக்காவான ஏற்பாட்டை செய்து விட்டுத் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

அதாவது, டைரக்டர் ஷங்கர் ஒரே நேரத்தில் ‘இந்தியன் 2’ மற்றும் ராம்சரணின் 15வது படம் இரண்டையும் இயக்கப் போவதாக அறிவித்த நிலையில், அதை பயன்படுத்திக் கொண்டு தான் கமல் மீண்டும் பிக் பாஸ் ஹோஸ்ட்டாக இந்த சீசனிலும் அதிரடி காட்டப் போகிறார் என்கின்றனர். பிக் பாஸ் படப்பிடிப்பு நடைபெறும் நாளில் ராம்சரண் படத்தின் படப்பிடிப்பை ஷங்கர் செய்வார் என்றும், மற்ற நாட்களில் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் கமல் பங்கேற்பார் என்றும் மாஸ்டர் பிளான் செய்யப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in