விஜய் 67 படத்தில் நடிக்கிறார் `பிக்பாஸ்’ ஜனனி?

விஜய் 67 படத்தில் நடிக்கிறார் `பிக்பாஸ்’ ஜனனி?

‘விஜய் 67’ படத்தில் ‘பிக்பாஸ்’ புகழ் ஜனனி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘வாரிசு’ படத்தைத்தொடர்ந்து விஜய் நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ். இந்தப் படத்தில் நாயகியாக நடிக்கிறார் த்ரிஷா. இயக்குநர் கௌதம் மேனன் நடிக்கிறார். மேலும், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், பிரித்விராஜ் சுகுமாரன், மன்சூர் அலிகான், மிஷ்கின் ஆகியோரும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த நிலையில், இப்படத்தில் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த ஜனனி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கிய நிலையில், பொங்கலுக்குப் பிறகு படப்பிடிப்பு மீண்டும் நாளை தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in