`கல்லில் மோதி கார் நின்றதால் பள்ளத்தில் விழாமல் தப்பித்தேன்'- பிக்பாஸ் பிரபலம் உருக்கம்

`கல்லில் மோதி கார் நின்றதால் பள்ளத்தில் விழாமல் தப்பித்தேன்'- பிக்பாஸ் பிரபலம் உருக்கம்

கார், விபத்தில் சிக்கியதை அடுத்து பிக்பாஸ் பிரபலம் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் திடீர் பிரபலமாவது சகஜம். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு அவர்களுக்கு சினிமா வாய்ப்புகள் தேடி வருகின்றன. தமிழ் மட்டுமின்றி மற்ற மொழிகளிலும் இதே நிலைதான்.

இந்நிலையில் மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சி 4-ல் கலந்து கொண்டவர் டாக்டர் ராபின் ராதாகிருஷ்ணன். ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற இவர், பிக்பாஸ் வீட்டில் சகப் போட்டியாளரைத் தாக்கியதால், இறுதிவரை முன்னேறாமல் வெளியேறினார். இருந்தாலும் இவருக்கு கேரளாவில் அதிக ரசிகர்கள் உள்ளனர்.

இதையடுத்து சினிமாவிலும் அவர் நடிக்க இருக்கிறார். சந்தோஷ் டி குருவில்லா தயாரிக்கும் படம் ஒன்றில் அவர் நடிப்பதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், இவர் கேரள மாநிலம் தொடுபுழாவில் உள்ள கடை திறப்பு விழாவுக்கு காரில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது அவர் சென்ற கார், எதிர்பாராதவிதமாக பள்ளத்தில் கவிழ்ந்தது. கல் ஒன்றில் மோதி கார் நின்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அது தடுக்கவில்லை என்றால் கார், பள்ளத்தில் கவிழ்ந்திருக்கும். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராபின், பின்னர் வேறு ஒரு காரில் சென்று விழாவில் பங்கேற்றார்.

அங்கு இதுபற்றி கூறிய அவர், ‘’வரும் வழியில் கார் பள்ளத்தில் கவிழ்ந்தது. நல்ல வேளையாக ஒரு பெரிய கல்லில் மோதி கார் நின்றுவிட்டதால் தப்பித்தேன்’’ என்று தெரிவித்துள்ளார். அவர் கார், விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in