பிக் பாஸ்7: பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்... பிக் பாஸ் பெண் போட்டியாளர் மீது எழுந்த பரபரப்பு புகார்!

பிக் பாஸ்7
பிக் பாஸ்7

பிக் பாஸ் பெண் போட்டியாளர் மீது எழுந்துள்ள பாலியல் ரீதியான துன்புறுத்தல் புகார் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

பிக் பாஸ் தமிழின் ஏழாவது சீசன் சண்டை சச்சரவுகளோடு தற்போது சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. முதல் டாஸ்க்காக ஹவுஸ் மேட்களை அறிந்து கொள்ளும் விவாதத்தை தொடங்கி வைத்துள்ளார் பிக் பாஸ். இந்த சீசனில் கலந்து கொண்டுள்ள 18 போட்டியாளர்களில் பிரதீப், மாயா, ரவீனா, நிக்ஸன், வினுஷா, விஜய் வர்மா ஆகியோர் கடினமான போட்டியாளர்களாக இருப்பார்கள் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில்தான் மாயா மீது கடந்த சில வருடங்களுக்கு முன்னால் எழுந்த பாலியல் புகார் ஒன்று மீண்டும் ரசிகர்களின் கவனத்திற்கு வந்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு மாடல் அழகி அனன்யா என்பவர் மாயா கிருஷ்ணன் மீது பாலியல் புகார் அளித்திருந்தார்.

மாயா கிருஷ்ணன்
மாயா கிருஷ்ணன்

கடந்த 2016ம் ஆண்டு தனக்கு 18 வயதான போது மாயாவை சந்தித்து இருவரும் நெருக்கமாக பழகியதாகவும், மாயா தன்னை கட்டிப்பிடித்து முத்தமிட்டதாகவும், நண்பர்களிடம் இருந்து மாயா தன்னைப் பிரித்து விட்டதாகவும் அந்த புகாரில் அனன்யா தெரிவித்து இருந்தார். இந்தப் புகார் வெளியான சமயத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால், இந்த விவகாரத்தில் அனன்யா தன் பெயருக்கு களங்கம் விளைவித்துள்ளார் எனவும் தான் அப்படி நடந்து கொள்ளவில்லை எனவும் மாயா கிருஷ்ணன் விளக்கம் அளித்ததை தொடர்ந்து பிரச்சினை அமைதியானது. ஆனால், தற்போது மாயா கிருஷ்ணன் பிக்பாஸில் பங்கேற்று இருப்பதால் அவருக்கு எதிரானவர்கள் அவர் மீதான இந்த பழைய புகாரை சமூக வலைதளங்களில் கிளப்பியுள்ளனர். ஆனால் அவரது ரசிகர்ளோ இது முடிந்து போன கதை, பிக்பாஸில் இவர்தான் கடின போட்டியாளராக இருக்கப் போகிறார் எனவும் தெரிவித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in