பிக்பாஸ்6: வெளியேறிய ஜிபி முத்து, வெளியேற்றப்பட்ட சாந்தி மாஸ்டர்; வைல்ட் கார்டில் வரும் பிரபலம் யார்?

பிக்பாஸ்6: வெளியேறிய ஜிபி முத்து, வெளியேற்றப்பட்ட சாந்தி மாஸ்டர்; வைல்ட் கார்டில் வரும் பிரபலம் யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜிபி முத்து, சாந்தி மாஸ்டர் வெளியேறியதைத் தொடர்ந்து வைல்ட் கார்ட்டில் வரப்போகும் பிரபலம் குறித்தான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பிக்பாஸ் ஆறாவது சீசன் தொடங்கிய நாளில் இருந்தே பரபரப்பாகப் போய்க்கொண்டிருக்கிறது. நிகழ்ச்சி ஆரம்பித்து 15 நாட்கள் ஆனதையடுத்து சின்னத்திரை ரசிகர்கள் எதிர்ப்பார்க்கும் சர்ச்சை, சண்டை என இந்த சீசன் ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாகி இருக்கிறது. பிரபலங்கள், பொதுமக்கள் என இந்த சீசனில் மொத்தம் 20க்கும் மேற்பட்டப் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் யூடியூப் மூலம் பிரபலமான ஜிபி முத்துவும் ஒருவர்.

மேலும் ஜிபி முத்து வெளியேறியதால் இந்த வாரம் எவிக்‌ஷன் இருக்காது எனவும் எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், பிக்பாஸ் சீசன்6-ல் முதல் எவிக்‌ஷனாக சாந்தி மாஸ்டர் நேற்று வெளியேற்றப்பட்டார். இதனையடுத்து, இதற்கு முந்தைய சீசனில் வனிதா விஜயகுமார் பாதியில் வெளியேற்றப்பட்டு மீண்டும் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே வந்தது போல ஜிபி முத்துவும் வர வேண்டும் என ரசிகர்கள் இணையத்தில் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

மேலும், இந்த சீசனில் நிச்சயம் வருவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நடிகர் மன்சூர் அலிகானிடமும் தீவிரமான பேச்சுவார்த்தை வைல்ட் கார்ட் என்ட்ரிக்காக நடக்கிறது எனவும் சொல்லப்படுகிறது. விரைவில் இது பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு பிக்பாஸ் குழுவிடம் இருந்து எதிர்ப்பார்க்கலாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in