பிக்பாஸ் அல்டிமேட் வின்னர் பாலா; ரன்னர் நிரூப்! - இறுதி நிகழ்வில் நடந்தது என்ன?

பிக்பாஸ் அல்டிமேட் வின்னர் பாலா; ரன்னர் நிரூப்! - இறுதி நிகழ்வில் நடந்தது என்ன?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஓடிடி வடிவமான பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் இறுதி நிகழ்ச்சி நேற்று நடந்தது. 24x7 என ஒளிபரப்பாகி வந்த இந்த நிகழ்ச்சியில் முந்திய சீசன்களில் இருந்து 14 போட்டியாளர்கள் உள்ளே வந்தனர். இப்போது நிரூப், தாமரை, பாலா மற்றும் ரம்யா ஆகிய நால்வர் இறுதி கட்ட போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்கபட்டுள்ளனர்.

ஜூலி இந்த வாரம் இறுதி போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார். ஆனால், அந்த காட்சிகள் எதுவும் பிக்பாஸ் அல்டிமேட்டில் ஒளிபரப்பபடவில்லை. முதல் சீசனை காட்டிலும் இந்த அல்டிமேட்டில் ஜூலி மீதான நெகட்டிவ் விமர்சனங்கள் குறைவு. ஃபினாலேக்கு வந்திருந்த ஜூலி இதையும் நெகிழ்ச்சியாக பகிர்ந்து கொண்டார். அவரது பயண வீடியோ ஒளிபரப்பப்பட்டது.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பிக்பாஸ் அல்டிமேட்டின் தொகுப்பாளரான சிம்புவை வரவேற்கும் விதமாக அவரது சிறு வயது முதல் சமீபத்திய ஹிட்டான 'மாநாடு' படம் வரை பாடல்கள் ஒலிக்கப்பட்டு நடனம் ஆடி சிம்புவை வரவேற்றார்கள்.

கிட்டத்தட்ட நான்கு மணி நேரத்திற்கும் மேல் நடந்த கிராண்ட் ஃபினாலேவில் முந்தைய சீசன்களின் போட்டியாளர்கள் மற்றும் அந்த சீசனில் இருந்து எலிமினேஷன் ஆனவர்கள் உள்ளே வருவார்கள். அந்த வகையில் இந்த பிக்பாஸ் அல்டிமேட் சீசனின் போட்டியாளர்களான அனிதா, ஷாரிக், அபிநய், சுஜா, சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் உள்ளே உள்ளனர். மேலும் முந்தைய சீசனில் இருந்து பிரியங்கா, பாவனி, அமீர், அபிஷேக் ராஜா ஆகியோர் உள்ளே வந்தனர்.

மேலும் முந்தைய சீசன்களின் வின்னர்களான ரித்திகா, ராஜூ ஆகியோரும் மேடையில் தோன்றி அவர்களுடைய பிக்பாஸ் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதோடு போட்டியாளர்கள் பற்றியும் கூறினர். பின்பு உள்ளே போட்டியாளர்களுக்கு இறுதி நிகழ்வில் தனியிசை கலைஞர்களது இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பின்பு சிம்பு பிக்பாஸ் அல்டிமேட் வீட்டிற்குள் சென்று போட்டியாளர்களுடன் சிறிது நேரம் பேசினார்.

பின்பு நான்காவது இடத்தில் இருந்த தாமரை வெளியேற்றப்பட்டார். மூன்றாவது இடம் ரம்யாவுக்கு. வின்னராக பாலா அறிவிக்கப்பட்டார். நிரூப் ரன்னர் அப்.

நான்காவது சீசனில் நான் வெற்றியாளர் இல்லை என்பது எனக்கு முன்பே தெரிந்து இருந்தது. ஆனால் இங்கு நான் பெற்ற வெற்றியை எனக்கு ஓட்டு போட்ட ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கிறேன் என்றார் பாலா.

ஐந்தாவது சீசனில் ஐந்தாவது இடத்தில் இருந்து அல்டிமேட்டில் இரண்டாவது இடம் வந்தது சந்தோஷம் என்றார் நிரூப்.

வெற்றியாளரான பாலாவுக்கு அல்டிமேட் ட்ராஃபியும் 35 லட்சம் பரிசுத்தொகைக்கான காசோலையும் வழங்கப்பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in