பிக்பாஸ் 6: போட்டியாளராக பங்கேற்கும் இசையமைப்பாளரின் முன்னாள் மனைவி?

பிக்பாஸ் 6: போட்டியாளராக பங்கேற்கும் இசையமைப்பாளரின் முன்னாள் மனைவி?

பிக்பாஸ் ஆறாவது சீசனில் இசையமைப்பாளர் இமானின் முன்னாள் மனைவி கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகப் புகழ்பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை தமிழில் ஐந்து சீசன்களை முடித்திருக்கிறது. இதுமட்டுமில்லாமல் ஓடிடி பார்வையாளர்களுக்கு என பிரத்யேகமாக ஒளிபரப்பான பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியும் சமீபத்தில் நிறைவடைந்திருக்கிறது. வழக்கமாக பிக்பாஸ் சீசன் ஒவ்வொரு வருடமும் ஜூலை இறுதியில் தொடங்கி விடும்.

அந்த வகையில் இந்த வருடமும் வழக்கம் போலவே பிக்பாஸ் சீசன் ஜூலை இறுதி வாரம் அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்குவதற்கான பணிகள் தீவிரமாக தொலைக்காட்சி தரப்பில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கமல்ஹாசன் பிக்பாஸ் அல்டிமேட்டில் இருந்து படப் பணி காரணமாக பாதியில் விலகியபோது பிக்பாஸ் ஆறாவது சீசனை நான் தொகுத்து வழங்குவேன் என உறுதியாக கூறி இருந்தார்.

ஆனால் பிக்பாஸ் ஓடிடியை நடிகர் சிம்பு தொடங்கியதால் இப்பொழுது கமல்ஹாசன் ஆறாவது சீசனுக்கு வருவாரா அல்லது நடிகர் சிம்பு வருவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உள்ளது. இது மட்டுமில்லாமல் இந்த சீசனில் யாரெல்லாம் போட்டியாளராக கலந்து கொள்ள போகிறார்கள் என்பது குறித்தான உத்தேச பட்டியலும் இப்போது வெளியாகியுள்ளது.

க்ஷஇந்த பட்டியலில் விஜய் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சந்தோஷ், ஸ்ருதிகா, சின்னத்திரை நடிகை ரவீனா, நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லே, சுப்பு பஞ்சு, பூனம் பஜ்வா உள்ளிட்ட பலரது பெயர்கள் அடிபடுகிறது. இவர்கள் மட்டும் இல்லாமல் இப்பொழுது இசையமைப்பாளர் இமானின் முன்னாள் மனைவியான மோனிகா ரிச்சார்ட் பெயரும் அடிபடுகிறது என்பதுதான் ரசிகர்கள் மத்தியில் மேலும் ஆர்வத்தை தூண்டியுள்ளது.

மனைவியை விவாகரத்து செய்வதாக கடந்த வருட இறுதியில் அறிவித்தார் இசையமைப்பாளர் இமான். இதன் பிறகு கடந்த சில வாரங்களுக்கு முன்பு அமலி என்பவருடன் இரண்டாவது திருமணம் நடைபெற்றது. இதுகுறித்து செய்தியை இசையமைப்பாளர் இமான் சமூக வலைதளங்களில் பகிர்ந்த போது அவரது முன்னாள் மனைவி மோனிகா திருமண வாழ்த்துகள் என கூறியதோடு, 'இதற்குள் நீங்கள் இப்படி மாறுவீர்கள் என எதிர்பார்க்கவில்லை! இத்தனை வருடம் உங்களுடன் வாழ்க்கையை கழித்தது முட்டாள்தனம்! நீங்கள் திருமணம் செய்து கொண்டிருப்பவரின் மகளை உங்கள் அப்பாவிடமிருந்து தேவைப்பட்டால் பாதுகாப்பேன்' என காட்டமாக கூறியிருந்தார்.

இதனை அடுத்து இந்த சீசனில் அவரது பெயர் அடிபடுகிறது. இது குறித்து இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால் இவர் கலந்து கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் அதிகாரபூர்வமான அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in