நடிகைகளிடம் சம்பளம் குறைக்கச் சொல்வதா? பிரபல நடிகை சாடல்

பூமி பட்னேகர்
பூமி பட்னேகர்

நாயகிகளிடம் மட்டும் சம்பளத்தைக் குறைக்கச் சொல்வது, கடுமையாகத் தொந்தரவு செய்கிறது என்று நடிகை பூமி பட்னேகர் தெரிவித்துள்ளார்.

பிரபல இந்தி நடிகை பூமி பட்னேகர். லஸ்ட் ஸ்டோரிஸ், பதி பத்னி அவர் வோஹ், பூட் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்துள்ள பதாய் தோ என்ற படம் கடந்த வாரம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இதில் அவர் லெஸ்பியனாக நடித்திருந்தார். இந்தப் படம் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், சினிமாவில் தொடர்ந்து நடிகைகள் ஒதுக்கப்படுகிறார்கள் என்றும் சம்பள விஷயத்திலும் வித்தியாசமாகவே நடத்தப்படுகிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

பூமி பட்னேகர்
பூமி பட்னேகர்

அவர் கூறியிருப்பதாவது:

கரோனாவுக்கு பிறகு சினிமாதுறை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. தியேட்டர்கள் மூடப்பட்டன. இதனால் சம்பளக் குறைப்பு பற்றிய பேச்சுகள் எழுந்தன. ஆனால், எந்த தயாரிப்பாளரும் சக ஆண் நடிகரிடம் சென்று கரோனாவுக்காக சம்பளத்தைக் குறைந்துக்கொள்ளுங்கள் என்று கேட்டதாக கேள்விபடவில்லை. ஆனால், நடிகைகளிடம் சம்பளத்தைக் குறைக்கச் சொல்லி கேட்கிறார்கள். சினிமாவில் நடிகர்களுக்கும் நடிகைகளுக்குமான ஊதிய வித்தியாசம், பல வருட பிரச்னையாக இருக்கிறது. இந்த ஏற்றத்தாழ்வு உண்மையிலேயே தொந்தரவு செய்கிறது. பெண்களிடம் இருந்து மட்டும் சம்பளக் குறைப்பு எதிர்பார்க்கப்படுவது, கேலிக்கூத்தானது. இவ்வாறு பூமி பட்னேகர் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in