5 வருடத்துக்குப் பின் மலையாளத்துக்கு திரும்பிய பாவனா

5 வருடத்துக்குப் பின் மலையாளத்துக்கு திரும்பிய பாவனா

நடிகை பாவனா, ஐந்து வருடத்துக்குப் பிறகு மலையாளப் படத்தில் நடிக்கிறார்.

'சித்திரம் பேசுதடி' படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் மலையாள நடிகை பாவனா. அடுத்து ஜெயம் கொண்டான், அஜித்தின் `அசல்' உட்பட சில படங்களில் நடித்தார். தமிழ், மலையாள, கன்னடப் படங்களில் நடித்து வந்த அவர், மலையாளத்தில் கடைசியாக, பிருத்விராஜ் ஜோடியாக ஆடம்ஜான் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் கடந்த 2017-ம் ஆண்டு வெளியானது.

பின்னர் கன்னடத் தயாரிப்பாளர் நவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பிறகு கன்னட சினிமாவில் மட்டுமே நடித்து வந்தார். இந்நிலையில் 5 வருட இடைவெளிக்கு பிறகு மலையாளத்தில் மீண்டும் நடிக்கிறார் பாவனா. ’என்டிக்காக்கொரு பிரேமமுண்டார்நு’ (Ntikkakkakkoru Premandaarnnu) என்ற படத்தில் அவர் நடிக்க இருக்கிறார். இதை அடில் மைமூநாத் அஷ்ரப் என்பவர் இயக்குகிறார்.

இந்தப் படத்தின் போஸ்டரை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள மம்மூட்டி, நடிகை பாவனா உள்பட படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மே மாதம் இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in