நடிகர் பரத்தின் 50-வது பட பர்ஸ்ட் லுக் வெளியீடு

நடிகர் பரத்தின் 50-வது பட பர்ஸ்ட் லுக் வெளியீடு
பரத், வாணி போஜன்

நடிகர் பரத் நடிக்கும் 50-வது பட பர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.

நடிகர் பரத்தின் 50-வது படத்தை, ஆர்.பி.பாலா இயக்கி வருகிறார். இவர், லூசிஃபர், மரைக்காயர், குருப் உள்ளிட்ட பல படங்களின் தமிழ் மறு ஆக்கத்துக்கு வசனம் மற்றும் பாடல்களை எழுதியவர். பரத் நடிக்கும் இந்தப் படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இதில் பரத் ஜோடியாக, வாணி போஜன் நடிக்கிறார்.

விவேக் பிரசன்னா, பிக் பாஸ் புகழ் டேனி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பி.ஜி. முத்தையா ஒளிப்பதிவு செய்கிறார். ’மரைக்காயர்’ படத்தின் மூலம் கவனிக்க வைத்த ரான்னி ரபேல் இசையமைக்கிறார்.

இந்தப் படம், கடந்த மாதம் சென்னையில் தொடங்கப்பட்டது. குடும்பப் படம் என்றாலும் படத்தில் த்ரில்லருக்கான தன்மை இருக்கும் என்று கூறியிருந்தார் இயக்குநர்.

இந்நிலையில் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி படத்துக்கு ’லவ்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

ஏற்கெனவே பரத்தும் வாணி போஜனும் இணைந்து மற்றொரு படத்திலும் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தை எஸ்.சக்திவேல் என்பவர் இயக்கி வருகிறார்.

Related Stories

No stories found.