`முதல்வர் மீது இறைவன் அருள் புரியட்டும்'- ஸ்டாலினை வாழ்த்தும் பாரதிராஜா

`முதல்வர் மீது இறைவன் அருள் புரியட்டும்'- ஸ்டாலினை வாழ்த்தும் பாரதிராஜா

"மக்கள் அபிமான முதல்வராக தமிழகம் பார்த்த நல் முன்னோடிகளின் பட்டியலில் தாங்களும் ஒருவராக காலத்தால் என்றும் நிலைத்திருக்க அந்த இறைவன் அருள் புரியட்டும்" என்று தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா வாழ்த்தியுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு அவர் வெளியிட்டுள்ள பிறந்தநாள் வாழ்த்து செய்தியில், "வரலாற்று சிறப்புமிக்க தமிழ்நாட்டின் முதல்வராக மகுடம் சூட்டப்பட்டதிலிருந்தும், உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி வாகை சூடியதிலிருந்தும் மக்களின் நம்பிக்கை நீங்கள் எனத் தெளியத் தெரிகிறது. அந்நம்பிக்கையை பொய்யாக்கிவிடாமல் நல் அறிவிப்புகளோடு சிறந்த செயல்பாடுகளின் மூலம் நாளும் மகிழ்வை மக்களுக்கு திரும்பத் தந்து கொண்டிருக்கிறீர்கள். எங்கள் திரைத்துறையையும் கனிவோடு கவனித்துக் கொள்கிறீர்கள். மகிழ்ச்சி.

அதேபோல தங்கள் உடல் நலத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள். மக்கள் அபிமான முதல்வராக தமிழகம் பார்த்த நல் முன்னோடிகளின் பட்டியலில் தாங்களும் ஒருவராக காலத்தால் என்றும் நிலைத்திருக்க அந்த இறைவன் அருள் புரியட்டும். திராவிட வளர்ப்பு நீங்கள். கடவுள் நம்பிக்கை உண்டா இல்லையான்னு தெரியாது. ஆனால் அடுத்தவர்களின் மனதை மதிப்பவர் என்பதை துர்கா அவர்களின் இறை நம்பிக்கைக்கு மதிப்பளித்திருப்பதின் மூலம் தெரிந்திருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in